`சார்பட்டா’ ஓடிடி ரிலீஸ்

 பா.இரஞ்சித்தின் `சார்பட்டா’ ஓடிடி ரிலீஸ்… ரெக்கார்ட் பிரேக்கிங் விலைக்குப் போட்டிப் போட்ட அமேசான்!தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் படம் ‘சார்பட்டா’. ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் கலையரசன், பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட் என ஒரு பெரிய நடிகர் கூட்டமே நடித்திருக்கிறது.
70, 80-களில் வடசென்னை பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்த ரோஷமான ஆங்கிலக் குத்துச்சண்டைதான் படத்தின் கதைக்களம். சார்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை என இரண்டு பரம்பரைகள் தொடர்ந்து குத்துச்சண்டைப் போட்டியில் மோதிக்கொள்வதும், இவர்களுக்கு இடையேயான ஈகோவுமே படத்தின் திரைக்கதை. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தொடக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் முழு வீச்சில் நடந்தன. மார்ச் - ஏப்ரல் மாதவாக்கில் ரீலீஸுக்கு படம் திட்டமிடப்பட்டது. ஆனால், திடீரென கொரோனாவின் இரண்டாவது அலை, லாக்டெளன் என மீண்டும் தியேட்டர்கள் முடங்க ரிலீஸ் தள்ளிப்போனது.
இதற்கிடையே இரஞ்சித்தின் இயக்கத்தில் ‘சார்பட்டா’ படம் மிகச்சிறப்பாக தயாராகி இருப்பதாகவும், ஆர்யாவின் நடிப்பு படத்துக்கு பெரும்பலம் சேர்த்திருப்பதாகவும் சினிமா வட்டாரத்துக்குள் தகவல்கள் பரவ படத்தை வாங்குவதற்கான போட்டாபோட்டி தொடங்கியது.
கொரோனாவால் தியேட்டர்கள் திறப்பு எப்போது என்று யாராலும் உறுதியாகச் சொல்லமுடியாத நிலை நிலவுவதோடு, கொரோனாவின் மூன்றாவது அலையும் எதிர்பார்க்கப்படுவதால் மிகப்பெரிய தொகைக்குப் படத்தைக் கேட்ட அமேஸான் ப்ரைமுக்கு ‘சார்பட்டா’ படத்தை விற்றிருக்கிறது தயாரிப்புத் தரப்பு!
அமேசான் ப்ரைம் ‘சார்பட்டா’ படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யும் என எதிர்பார்க்கலாம்!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,