இன்னொரு கடவுள்

 மருத்துவர்கள் தினம் இன்று
 ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்தில் ஆரோக்கியமாக இருக்கும் என்பது முக்கியமானதாகும்.


ஒருவன் செல்வந்தனாக இருப்பினும்,உடல் முழுவதும் நோய் இருப்பின், அந்தக் கவலை அவனை வாட்டி வதைக்கும், அவனது பணம் நோய் தன்மைக்கு செலவு செய்யும், நோய் தீரும் வரை அவன் பல சிரமங்கள் படுவது மிக்க வேதனையைத் தரும்.


 அதேசமயம் ஏழையாக இருப்பவன் தம்மிடம் ஓரளவு வருமானம் இருந்தாலும் எவ்வித உடல்நலமின்றி ஆரோக்கியமாக இருப்பவன் மகிழ்ந்தே இருப்பான்.


 உடல் நலத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். இன்றைய சூழ்நிலையில் உடல்நலம் சீராக இருக்க உடற்பயிற்சி மிகவும் அவசியமாகிறது. யோகா,நடை,போன்ற உடல்  பயிற்சிகள் எவருக்கும் தேவை என்பதை உணர வேண்டும்.மனதை இறுக்கம் இல்லாமல் வைத்துக்கொண்டு  வாழ்வதும் நிறைவானதாக அமையும்.


மேலும் வாழும் காலத்தில் எவ்வித தீய பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருப்பதும் தனக்குள்ளேயே ஒரு கட்டுப்பாட்டை வைப்பதும்,, நல்ல உணவு பழக்கத்தை அதாவது  பசித்தபின் புசி என்ற மந்திர உபதேசத்தையும் அறிபவர்கள்,நல்ல ஆரோக்கியத்திற்கு வித்தாக அமையும்.


 இன்றைய காலகட்டத்தில் மருத்துவரிடம்  செல்லாமல்  எவனொருவன் வாழ்கிறானோ அவனே   பெரும் பணக்காரன்.


 நம்மையும் மீறி திடீரென நமக்கு ஏற்படும் உபாதைகளுக்கு மருத்துவரிடம் செல்வதைத் தவிர வேறு வழியும் இல்லை.


இன்றைக்கு மருத்துவராக இருப்பவர்கள் தன்னிடம் வருபவர்களின் நோயின் தன்மையை ஆராய்ந்து அவரிடம் தன்மையோடு பேசி அவரை பூரண நலம் பெற வைப்பது அவர்களின் கடமை இதனால் மருத்துவரை நாம் கடவுளாக கருதலாம் மருத்துவர் தினமான இன்று, அப்பேர்ப்பட்ட மருத்துவரை போற்றி புகழ்வதோடு ஒரு கவிதை எழுதி பெருமை படுத்துவோம்.


 சோதனையென வருவோர் உடல் தன்மையை ஆராய்ந்து


 பரிசோதனையினை திறம்பட முறையாய் செய்து


 வேதனையை போக்கி உடல்நலம் முன்னேற்றம் அளித்து


 சாதனை செய்பவர்களே தரமிக்க மருத்துவர்


( இன்னொரு கடவுள்)

---முருக.சண்முகம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,