ஜெய் அனுமான் / ஆஞ்சநேயர் வரலாறு/ கவிதைத் தொடர் ..........................

 கவிஞர் .முருக. சண்முகம்  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல்

கவிதைகள் ,பல ஆன்மிக கட்டுரைகள் எழுதியுள்ளார் ,இவரின் ஆன்மிக தொடரான ரமண மகரிஷி நமது பீப்பிள் டுடேயில் தொடராக வந்து

வாசகர்களின் பராட்டுதல்களை பெற்றது

நமது வாசகர்களுக்காக  ஆஞ்சநேயர் வரலாற்றை கவிதையாக தந்துள்ளார்

பாருங்க .படியுங்கள் வாசகர்களே

-ஆசிரியர்.


ஜெய் அனுமான்

 

 ஆஞ்சநேயர் வரலாறு (1)

           ..........................




 

 வாயுவின் வம்சம் ஜெய ஜெய அனுமான்

 

 

 சிவனின் அம்சம் ஜெய ஜெய அனுமான்

 

 ஜெய ஜெய அனுமான் ஜெய ஜெய அனுமான்

 

 மூல நட்சத்திரத்தில் மண்ணில் பிறந்த

 மழலை

 

 முகமலர்ந்து ஈர்த்தது பிறர் மனதை

 

 பெற்றவர்கள் பிள்ளையால் பூரித்து மகிழ

 

 மற்றவர்கள் கொண்டாட்ட களிப்பிலே திகழ

 

 அனைவரையும் கண்டு மழலையும் துள்ள

 

 

 ஆனந்தம்  தரும் குழந்தையை கொஞ்சியே அள்ள

 

 

 பாலகன் செய்தான் விளையாட்டிலும் சேட்டை

 

 பார்த்தவர்கள் விசித்திரமேயென தந்தனர் பாராட்டை

 

 

 துணிவை துணையென கொண்ட முல்லையாய்

 

 தோல்வி பயமேதும் அறியாத பிள்ளையாய்

 

 வளரும்போது செய்கையில் ஒருவித  சுறுசுறுப்பு

 

 வையகத்தில் தனியாற்றல் கொண்டவொரு வீராப்பு

 

 கண்டது வானிலே செந்நிறப் பொருளை

 

 கனியென நினைத்து கவர்ந்தது அப்பொருளை

 

 கதிரவன் அதுவென அறியாத பிள்ளை

 

 கையில் பிடிக்க விண்ணில் பறந்த

 வேக நிலை





(





தொடரும்)


கவிஞர் .முருக. சண்முகம்

சென்னை

 


 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,