நா. முத்துக்குமார் பிறந்தநாளின்று.

 மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் பிறந்தநாளின்று.




💐
பழக்கத்தினாலும்., மனதை விட்டு நீங்காத பல தமிழ் பாடல்கள் மூலமும் இன்றும் நம்மிடையே வாழும் கவிஞர் தம்பி நா. முத்துகுமார்
இறந்துவிட்டவர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடலாமா என்ற விவாதம் எப்போதும் நடைபெறுவதுண்டு. இதுகுறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். ஆனால் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியோர்கள் இறந்துவிட்ட பிறகு அவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் இரண்டையும் அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பை அவர்களுடைய இன்றியமையாமையை அவர்கள் விட்டுச் சென்றதால் விளைந்த இழப்பை நினைவுகூர்ந்து பெருமைப்படுத்துவது தமிழ்ச் சமூகத்தின் மரபு.அப்படிப்பட்ட பெரியோர்களுக்கு இணையாக தமிழர்களால் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இயங்கும் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறார் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் நா.முத்துக்குமார்.
திரைப்படங்களுக்குத் தேவைப்படும் அனைத்து வகையான பாடல்களையும் வெகு சிறப்பாக எழுதிவந்தார் முத்துக்குமார். நினைத்து நினைத்து ரசிக்க வைக்கும் காதல் பாடல்கள், புத்துணர்வூட்டும் நாயக அறிமுகப் பாடல்கள், ஆட்டம் போடவைக்கும் பாடல்கள், அதிநவீன நகர வாழ்க்கையைச் சித்தரிக்கும் பாடல்கள், கிராமியப் பாடல்கள், மனதை உருக்கும் சோகப் பாடல்கள், துவண்ட மனங்களுக்கு நம்பிக்கை ஊட்டும் தன்னம்பிக்கைப் பாடல்கள், கதைகளின் கருப்பொருளை ஒரே பாடலில் விளக்கத் தேவைப்படும் தீம் பாடல்கள் என அனைத்து வகையான பாடல்களிலும் முத்துக்குமார் எழுதிய சிறப்பான வெற்றிபெற்ற பாடல்களை வைத்து தனித் தனிப் பெரும் பட்டியல்களைத் தயாரிக்கலாம்.
பொதுவாழ்வில் ஒரு கவிஞராக, பாடலாசிரியராக, எழுத்தாளராக வியக்க வைக்கும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள நா.முத்துக்குமார் ஒரு நல்ல மனிதராகவும் இருந்தார். திரைத் துறைக்குள்ளும் வெளியேயும் அவரை உற்ற நண்பனாக பாசத்துக்குரிய சகோதரனாகக் கருதும் நூற்றுக்கணக்கானோர் இருந்தார்கள். இன்றுவரை அவர் இல்லாததை உணர்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,