அரிசி, பருப்பு, நெய் என மளிகை பொருட்களில் வண்டு, புழு வச்சு வீணா போகுதா? இந்த டிப்ஸ்

 

அரிசி, பருப்பு, நெய் என மளிகை பொருட்களில் வண்டு, புழு வச்சு வீணா போகுதா? இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க

அடிக்கடி கடைக்கு சென்று வர முடியாத காரணத்தால் பலரும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி வைத்துவிடுகின்றனர். ஆனால் அவை சில நாட்களிலேயே வண்டு பிடிப்பது , புழு பிடிப்பது என பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனால் பணமும் வீணாகிறது. பொருளும் வீணாகிறது. எனவே இதை சரி செய்ய நீங்கள் சில சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே போதுமானது.

அதேபோல் புளியை ஜாடியில் வைக்கும்போது ஒவ்வொரு அடுக்காக வையுங்கள். அதன் ஒவ்வொரு அடுக்கின் இடையிலும் கல் உப்பு சிறிதளவு வையுங்கள். இதனால் நீண்ட நட்களுக்கு புளி ஃபிரெஷாக இருக்கும்.


உடைத்த கடலை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்தால் நமத்து போய்விடும். எனவே அதை வாணலியில் சூடேறும் பதத்தில் வறுத்து பின் டப்பாவில் அடைத்து வையுங்கள்.

நீங்கள் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு மாதம் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை அரைத்து வைக்கும் பழக்கம் இருந்தால் அதில் கொஞ்சம் கல் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். இதனால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,