''மகேந்திரன் பற்றிய அறிமுகம்?"

 ஆனந்த விகடனுக்காக இயக்குநர் மகேந்திரன் அளித்த பேட்டிகளிலிருந்து

''மகேந்திரன் பற்றிய அறிமுகம்?"

















நான் குறை மாசத்துல பிறந்தவன். மற்ற குழந்தைகளைப்போல நான் என்னோட சின்ன வயசுல இருந்ததில்லை. எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுலகூட என் அம்மாகிட்ட மத்தவங்க, 'எப்படியோ... உன் பிள்ளை பிழைச்சுட்டான். என்ன ஒண்ணு, மத்த பிள்ளைங்க மாதிரி இருக்க மாட்டான்'னு சொல்வாங்க. இதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டுதான் இருப்பேன். அதுதான் என்னை மாத்துச்சுனு நினைக்கிறேன். அப்போ, என்னால மத்த பிள்ளைங்க மாதிரி ஓட முடியாது, விளையாட முடியாது. மத்தவங்க செய்யாததை நாம செய்யணும்னு முடிவு பண்ணேன். லைப்ரரி பக்கம் ஒரு பையனும் வரமாட்டான். அர்த்தம் புரியுதோ இல்லையோ, எல்லா மொழிப் புத்தகங்களும் படிக்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து லைப்ரரி போனேன். போகப்போக எனக்குப் புத்தகங்கள்தான் உலகமா மாறுச்சு. கல்கி, சாண்டில்யன், தி.ஜானகிராமன்னு பெரும் உயரத்துல இருந்த எழுத்தாளர்களோட படைப்புகளைப் படிச்சேன். சினிமாவுல எழுத்தாளர், அப்புறம் இயக்குநர் ஆனேன்."
“எம்.ஜி.ஆர், சிவாஜி கூட பல வருடம் பயணிச்சிருக்கீங்க. அவங்க கூட ஒரு புகைப்படம்கூட நீங்க எடுத்ததில்லைனு சொல்றாங்களே?"
"அது என்னன்னு தெரியல... தோணவே இல்லை. அப்பப்போ நினைச்சுப் பார்க்கிறப்போ எனக்கே ஆச்சர்யமா இருக்கும். எம்.ஜி.ஆர் கூட இருந்தப்போவும் சரி. ரஜினி, கமல் கூட இருந்தப்போவும் சரி. நானா விருப்பப்பட்டு அவங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்கிட்டது கிடையாது. நான் தேவ் ஆனந்த்தோட மிகப்பெரிய ரசிகன். ஒருமுறை பாம்பே போனப்போ ஒரு ஹோட்டல்ல தங்கியிருந்தேன். ஒரு புரொடக்ஷன் மேனேஜர் மூலமா நான் இருக்கிறதைத் தெரிஞ்சிக்கிட்டு என்னைப் பார்க்க வந்திருக்கார் தேவ் ஆனந்த். என் ரூம் கதவை அவர் தட்ட, நான் யாருனு தெரியாம 'எஸ். கம் இன்'னு சொல்றேன். அவரைப் பார்த்தவுடனே ஆடிப்போயிட்டேன். எதுவும் பேசாம நிக்கிறேன். 'ரூமுக்கு வாங்க'னு சொல்லிட்டுப் போறாரு. 'நாம ஒண்ணும் அவ்வளவு பெரிய டைரக்டரும் இல்லையே. நம்மளைப் பார்க்க வந்திருக்காரே'னு நினைச்சுக்கிட்டே அவரோட ரூமுக்குப் போனேன். ஒரு ரசிகரா, எனக்கு அவர் எத்தனை மணிக்கு எழுந்திருப்பாரு, என்ன சாப்பிடுவாருங்கிறது வரைக்கும் தெரியும். அவர்கிட்ட போனேன். என்னென்னவோ பேசுறாரு, நான் அவரைப் பார்த்துக்கிட்டே உட்கார்ந்திருக்கேன். இந்தச் சந்திப்பு 'ஜானி' படம் வந்த சமயத்துல நடந்துச்சு. இப்படியெல்லாம் அவரை நேசிச்சிருக்கேன். ஆனா, அவரோடும் நான் போட்டோ எடுத்துக்கிட்டது கிடையாது. அவ்வளவு பெரிய மனுஷங்ககூட எல்லாம் இருந்திருக்கோம். ஒரு போட்டோ கூட எடுக்கலையேனு சமயத்துல வருத்தமாகூட இருக்கும்."
"நீங்க விருப்பமில்லாமல்தான் சினிமாவுக்கு வந்ததா சொல்லியிருந்தீங்களே?"
"ஆம். விருப்பமில்லாமதான் வந்தேன். எம்.ஜி.ஆர் என்னை சினிமாவுக்குக் கூட்டிட்டு வந்தார். சினிமாவும் கல்யாணம் மாதிரிதான். ஒருசிலர் விருப்பப்பட்டு கட்டிக்குவாங்க. ஆனால், சினிமா எனக்குக் கட்டாயக் கல்யாணம்தான். எம்.ஜி.ஆர் கட்றா தாலியனு சொல்லிட்டாரு. அதுக்குனு என் மனைவியை நான் கொடுமைப்படுத்தலை. எனக்குத் தெரிஞ்ச சினிமாவை எடுத்தேன். அதுக்கப்புறம் இந்த சினிமாவே வேணான்டானு நிறைய தடவை ஓடியிருக்கேன். சினிமாவுல படங்கள் இயக்க ஆரம்பிச்ச பிறகும் ஓடியிருக்கேன். ஏன்னா, நான் யார்கூடவும் அதிகம் பேசமாட்டேன். ரஜினி கூட நல்லாப் பேசுவேன். மத்த யார்கிட்டயும் எந்தத் தொடர்பும் வச்சிக்க மாட்டேன். பணத்துக்காக எந்தப் படமும் எடுக்கலை. என் வேலை என்னவோ அதை நான் ஒழுங்கா பார்த்தேன்."
‘‘எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் பழகிய நீங்கள் அடுத்து கமல், ரஜினி, விஜய்... மூன்று தலைமுறை ஹீரோக்களுடனான நட்பைப் பற்றி?"
‘‘நீங்கள் இப்படிக் கேட்டப் பிறகே ‘யப்பா... நம்ம டிராவல் அங்கே இருந்து ஆரம்பிச்சிருக்கா?’ என நினைக்கத் தோணுது. சில சமயங்களில் வயது பெரிய அனுபத்தைத் தருது; ஒரு வகையான மறதியையும் தருது. என் வாழ்க்கையில் எந்த நல்ல விஷயமாக இருந்தாலும், அதைத் தந்தது எம்ஜி.ஆர்-தான். அதேபோல சிவாஜி சார், `தங்கப் பதக்கம்’ மூலமா இந்தியா முழுவதும் என் பேரைக் கொண்டுபோய் சேர்த்தவர். வெளியில் எம்.ஜி.ஆரை கடவுள் மாதிரி பார்த்த காலகட்டத்தில், மேலே துண்டு மட்டும் போட்டு்க்கொண்டு உட்கார்ந்திருந்த எம்.ஜி.ஆர் உடன் அவர் பக்கத்தில் நான் இருந்த காலங்கள் உண்டு. அதுவும் நான்கு ஆண்டுகள். ஒருநாள்கூட அவருடன் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோணவே இல்லை. இப்போது நினைத்துப்பார்த்தால், `அவங்களோட கிரேட்னெஸ் புரியாமலேயே ஜடப்பொருளா இருந்திருக்கோமே’ என்று தோன்றுகிறது. ரஜினி, கமலைத் தொடர்ந்து அந்த நட்புப் பயணம் மூன்றாவது தலைமுறையாக விஜய்யுடன் தொடர்வது மகிழச்சியாக இருக்கிறது.’’
"பொன்னியின் செல்வனுக்குத் திரைக்கதை எழுதிய அனுபவத்தைச் சொல்லுங்களேன்?"
"அப்போ எம்.ஜி.ஆர் எழுதச் சொன்னாரு. நிறைய பேரோட கதைகளைப் பார்த்தாரு. கடைசியா, நான் எழுதியதை ஓகே பண்ணாரு. படம் ஏன்னு தெரியல... எடுக்க முடியலை. அப்போ ஏதோ எழுதிட்டேன். இப்போ அதைப் படமா எடுக்க முடியாது. அந்தக் கதைக்கு வர்ணனையே 15 பக்கத்துக்குப் போகும். அதைத் திரைக்கதை பண்றது கஷ்டம்ங்க. நான் இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி திரும்பவும் படிக்க ஆரம்பிச்சேன். பிரமிச்சுப் போயிட்டேன். 30 பக்கத்துக்கு மேல என்னால போகவே முடியலை. இப்போ நினைச்சுப் பாக்குறேன், நான் எம்.ஜி.ஆருக்காகப் பண்ண பொன்னியின் செல்வன் திரைக்கதையெல்லாம் எங்க போச்சுனே தெரியலை."
''தற்போதைய தமிழ் சினிமாவின் சில அபத்தங்களை எப்படி மாற்றலாம்?''
''படம் பார்த்துட்டு வந்த பிறகும் மனசுக்குள்ள ரம்மியமான காட்சிகள் நினைவுக்கு வரணும். 'தி ஆர்டிஸ்ட்’ ஹாலிவுட் படம் வசனமே இல்லாமல் அழகா கறுப்பு - வெள்ளையில் எடுத்திருக்காங்க. நாமதான் 'பிளாக் அண்ட் வொயிட்’டை ஃப்ளாஷ் பேக் உத்தியா மட்டுமே பயன்படுத்துறோம். 1958-லேயே எம்.ஜி.ஆர்-கிட்ட 'ஏன் படத்துல டூயட் வருது’ன்னு கேட்டேன். அது இப்போ 2012 வரை தொடருது. குத்துப் பாட்டு, டூயட் இல்லாத மாற்று சினிமா வேணும். அதுதான் நல்ல சினிமாவும்கூட!''
இணையத்தில் இருந்து எடுத்தது

இன்று இவரின் பிறந்தநாள்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,