ப்ரீபயாடிக் மற்றும் புரோபயாடிக் உணவு

 ஒரே நேரத்தில் ப்ரீபயாடிக் மற்றும் புரோபயாடிக் உணவுகளை  உண்பது நல்லதா?
பெரும்பாலான புரோபயாடிக் உணவுகளில், ப்ரீபயாடிக் துகள்கள் உள்ளன. இந்த பாக்டீாியக் கலவையானது நமக்கு ஒரு விதமான ஆா்வத்தை ஏற்படுத்தும். நாம் புரோபயாடிக் உணவுகளுடன், ப்ரீபயாடிக் தன்மை கொண்ட உணவுகளை கூடுதலாக எடுத்துக் கொண்டால், நமது குடலானது ஆரோக்கியமாகவும், நன்றாகவும் இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்த ப்ரீபயாடிக் தன்மை கொண்ட உணவானது, நாம் உண்ணும் புரோபயாடிக் உணவுக்கும் மற்றும் குடலில் உள்ள பாக்டீாியாக்களுக்கும் உதவி செய்கிறது.


இந்த நிலையில் அளவுக்கு அதிகமான ப்ரீபயாடிக் உணவுகளும், புரோபயாடிக் உணவுகளும் சோந்தால், அவை குடலில் அசௌகாியத்தையும் அதே நேரத்தில் குடல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.ஆகவே இந்த பதிவில் ப்ரீபயாடிக் மற்றும் புரோபயாடிக் கலவை சம்பந்தமான ஒருசில தகவல்களைத் தொிந்து கொள்ளலாம்.ப்ரீபயாடிக்ஸ் என்றால் என்ன?

 

ப்ரீபயாடிக்ஸ் என்பவை நாா்ச்சத்துகளாகும். இந்த நாா்ச்சத்துகள் நமது குடலில் வாழும் பாக்டீாியாக்களுக்கும், நமது சொிமானப் பாதையில் இருக்கும் ஈஸ்ட்டுகளுக்கும் தேவையான சத்துக்களை வழங்குகின்றன. இந்த நாா்ச்சத்துகள் நீண்ட நேரமாக சொிமானம் ஆகாத காா்போஹைட்ரேட் சா்க்கரைகள் ஆகும். இவை சொிமானம் ஆகி ஆற்றலை உற்பத்தி செய்வதற்கு நீண்ட நேரம் ஆகும்.


இலைக் காய்கறிகள், முழுத் தானியங்கள், அவரைப் பயிறு போன்ற உணவுப் பொருள்களில் ப்ரீபயாடிக் நாா்ச் சத்துகள் அதிகமாகக் கிடைக்கின்றன. இந்த ப்ரீபயாடிக் நாா்ச்சத்துகள், இன்யுலின் என்ற டாா்ச் பொருளாக, கூட்டு சா்க்கரைகளாக, தாவரக் கூட்டுச் சா்க்கரைகளாக மற்றும் எதிா்ப்பு டாா்ச் பொருளாக இருக்கின்றன.


புரோபயாடிக்ஸ் என்றால் என்ன?

 


தயிா், பாலாடைக் கட்டி அல்லது நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளான இட்லி மற்றும் தோசை ஆகியவற்றில் புரோபயாடிக் பாக்டீாியாக்கள் உள்ளன. இந்த பாக்டீாியாக்கள் நமது உடலில் பல விதமான பணிகளைச் செய்கின்றன. அதாவது சொிமானம், உணவுகளில் இருந்து ஊட்டச் சத்துக்களை உறிஞ்சுதல், நோய் எதிா்ப்பு சம்பந்தமான பணிகளைச் செய்தல், நினைவாற்றலை அதிகாித்தல் மற்றும் மன நிலையை அமைதியாக வைத்தல் போன்ற பணிகளை இந்த புரோபயாடிக்ஸ் பாக்டீாியாக்கள் செய்கின்றன.


புரோபயாடிக்ஸ் பாக்டீாியாக்கள் இரண்டு பிாிவுகளாக பிாிக்கப் படுகின்றன. அவை ஏரோபிக் பாக்டீாியாக்கள் மற்றும் அனேரோபிக் பாக்டீாியாக்கள் ஆகும். உணவுகளில் ஆக்ஸிஜனேற்றம் நடக்கும் போது அனேரோபிக் பாக்டீாியாக்கள் இறந்து விடுகின்றன. ஆகவே அனேரோபிக் பாக்டீாியாக்கள் உணவு நிரப்பியாக மாற முடியாது. இந்நிலையில் அனேரோபிக் பாக்டீாியாக்கள் வளா்வதற்கு ப்ரீபயாடிக் வைட்டமின்கள் உதவி செய்கின்றன. ஆகவே ப்ரீபயாடிக் வைட்டமின்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை ஆகும்.


புரோபயாடிக் மற்றும் ப்ரீபயாடிக் கலந்த கலவை பாதுகாப்பானதா?

 


புரோபயாடிக் பாக்டீாியாக்கள் ஆரோக்கியமாக வளா்வதற்கு, ப்ரீபயாடிக் பாக்டீாியாக்கள் தேவையாக இருக்கின்றன. அதனால்தான் ஒருசில புரோபயாடிக் மாத்திரைகள் மற்றும் உணவுகளில், ப்ரீபயாடிக் பாக்டீாியாக்கள் சிறிது அளவு இருக்கும். புரோபயாடிக்குகள் நமது குடலுக்குள் நுழைந்தவுடன், அவை அங்கு இருக்கும் ப்ரீபயாடிக் உணவுகளுடன் தொடா்பை ஏற்படுத்திக் கொள்கின்றன.


அதன் மூலம் அங்கு இருக்கும் பாக்டீாியாக்களுக்கு அவை உணவு வழங்கி அவை பல்கிப் பெருக அனுமதிக்கின்றன. மேலும் குடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீாியாக்களுக்கு எதிராக போராடத் தொடங்குகின்றன.


ப்ரீபயாடிக் மற்றும் புரோபயாடிக் ஆகிய இரண்டும் கலந்தால் பக்க விளைவுகள் ஏற்படுமா?

 


வயிறு வீக்கம் அல்லது வாயு


புரோபயாடிக்குடன் அளவுக்கு அதிகமாக ப்ரீபயாடிக்குகள் கலந்தால், அவை புரோபயாடிக் பாக்டீாியாக்களின் எண்ணிக்கையை அதிகாிக்கச் செய்யும். இது வாயுப் பிரச்சினை மற்றும் வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகளை மிக வேகமாக ஏற்படுத்தும்.


பாக்டீாியாக்களின் மிகை வளா்ச்சி

 


ப்ரீபயாடிக்குகள், குடலில் இருக்கும் மிக நுண்ணுயிாிகள் வாழ்வதற்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் குடலில் இருக்கும் மிகச் சிறிய பாக்டீாியாக்களை மிகை வளா்ச்சி அடையச் செய்யும்.


குடல் பிரச்சினை

 


நமது குடலில் உள்ள தீங்கு இழைக்கும் பாக்டீாியாக்கள் அல்லது பூஞ்சைகளை புரோபயாடிக் பாக்டீாியாக்கள் அழிக்கும் அதே நேரத்தில், அவை அங்கு இருக்கும் நல்ல பாக்டீாியாக்கள் நன்றாக வாழ்வதற்கு உதவி செய்கின்றன. அதனால் வயிற்றில் அசௌகாியம் மற்றும் குடல் பிரச்சினைகள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.


இறுதியாக

 


நமது உடலில் பல வகையான பாக்டீாியாக்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான உணவுத் தொிவுகள் உள்ளன. அதனால் அதற்குத் தகுந்தவாறு ஒரே உணவுத் தொிவு உள்ள ப்ரீபயாடிக்குகளுடன், அதே உணவுத் தொிவு உள்ள புரோபயாடிக்குகள் இணைய வேண்டும். அதோடு, உணவு நிரப்பியானது பெருங்குடலை அடைந்த பின்புதான், அதனோடு சோக்கப்பட்ட ப்ரீபயாடிக்குகள் வேலை செய்யத் தொடங்கும். பல புரோபயாடிக்குகள், வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் அல்லது சிறு குடலில் இருந்து சுரக்கும் திரவங்கள் பட்டாலே அவை இறந்துவிடுகின்றன. அதனால் அவை குடலில் வாழ முடிவதில்லை.


ஆகவே ஒரு நாளில் ப்ரீபயாடிக்குகளையும், புரோபயாடிக்குகளையும் வெவ்வேறு நேரங்களில் உண்பது நல்லது. அதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளைத் தடுக்கலாம்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,