டேவிட் வாரன்
விமான காப்பகம் என்றழைக்கப்படும் கருப்பு பெட்டியைக் கண்டு பிடித்தவர் நினைவு தினமின்று
டேவிட் வாரன் என்னும் ஆஸ்திரேலிய அறிவியல் அறிஞர் 1953 இல் உலகின் முதல் கறுப்புப் பெட்டி விமான ரெக்கார்டரைக் கண்டுபிடித்தார்.
வாரனின் தந்தை ஹூபர்ட் வாரன் 1934 ஆம் ஆண்டில் பாஸ் ஸ்ட்ரெய்ட் விமான விபத்தில் இறந்தார்.அந்த விமான விபத்திற்கான காரணத்தை இறுதிவரை யாராலும் கண்டறிய இயலவில்லை. இந்நிகழ்வே வாரன் கறுப்புப் பெட்டியைக் கண்டறியத் தூண்டுகோலாக அமைந்தது.
டேவிட் வாரன் ஏ.ஆர்.எல் விமான நினைவக அலகு (ARL Flight Memory Unit) என்ற பெயரில் தயாரித்த கருவியே முதல் விமான கறுப்புப் பெட்டி ரெக்கார்டர் ஆகும்.
Comments