ஜெய் அனுமான் / ஆஞ்சநேயர் வரலாறு/ கவிதைத் தொடர் (2)

 ஜெய் அனுமான்    /  ஆஞ்சநேயர் வரலாறு/    கவிதைத் தொடர்


ஜெய் அனுமான்

 

 ஆஞ்சநேயர் வரலாறு (2)





ராகு சூரியனை பிடிக்கும் நாளில்

 

 தடை நடக்குமென என்று அஞ்சினர் வானில்

 

 தேவர்கள் கலங்கினர் என்னவாகும் என்று

 

 தீக்கதிர் சூடுமென கலங்கினர் அன்று

 

 இந்திரனின் வஜ்ராயுதம் அனுமனை நோக்கியே

 

 

 இடர்தர வேகமாய் வாயுமகனை தாக்கியே

 

 அடிபட்ட பாலகன் பூமியில் விழுந்திட

 

 அதைக்கண்ட அன்னை திகைப்பினால்  தவித்திட 

 

 இந்திரனின் செயலால் வாயுவோ கோபம்

 

 எதிர்பாரா நிலையிது யாரிட்ட  சாபம்

 

 அசைவற்ற தன்மை வாயுவால் மாறியே

 

 அந்நொடி முதலே இயற்கையை மீறியே

 

 தேவர்களின் இந்திரன் நடந்ததைச் சொல்ல

 

 வாயுதேவன் அறிந்தபின் காற்றசைந்தது அல்ல 

 

 

 வீழ்ந்தமகனும் பூமியிலிருந்து வேகமாய் எழுந்திட

 

 வேதனை தீர்ந்ததென யாவரும் மகிழ்ந்திட

 

 அனுமனின் ஆற்றலை உணர்ந்தனர் பெற்றோரும்

 

 அறியாது செய்ததென அறிந்தனர் மற்றோரும்

 

 தேவர்கள் வாழ்த்திய விதமும் நலமே

 

 சிரஞ்சீவியென இருக்க அளித்த வரமே

 

 இராகு அனுமனிடம் கொண்டதிங்கு பாசம்

 

 உளுந்தில் வடை செய்து தந்த நேசம்

 

 அன்புடனே மரியாதை அளித்த மாலை

 

 அனுமன் அப்போதே அணிந்த வடைமாலை


தொடரும்)


கவிஞர் .முருக. சண்முகம்

சென்னை

 


 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,