ஜெயந்தி


 சினிமாவிலிருந்து விலகி கர்நாடகாவில் வசித்துவந்த ஜெயந்தி, நீண்ட நாட்களாகவே ஆஸ்துமா தொந்தரவினால் அவதிப்பட்டுவந்துள்ளார். அதற்காக சிகிச்சை எடுத்துவந்த நிலையில், இன்று (26.07.2021) மரணமடைந்தார். நேற்று இரவு உணவை முடித்துவிட்டுப் படுக்கைக்குச் சென்ற ஜெயந்தி, இரவு உறங்கிக்கொண்டிருக்கும்போதே மரணமடைந்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார்






தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகை ஜெயந்தி, கடந்த சில வருடங்களாகவே ஆஸ்துமா பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். இதை தொடர்ந்து இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை ஜெயந்தி, தென்னிந்திய மொழிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தேசிய விருதையும் பெற்றுள்ளார் . 1960 மற்றும் 70 களில் வெள்ளித்திரையில் மிகவும் பிஸியான நாயகியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இப்படி பல மொழிகளில் நடித்திருந்தாலும் கன்னட திரையுலகில் தான் அதிக கவனம் செலுத்தினார். 7 முறை கன்னடா ஸ்டேட் அவார்ட் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற நடிகர்களான எம்.ஜி.ஆர், நாகேஷ் ,ஜெமினி கணேசன், ராஜ் குமார், என்.டி.ஆர் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் 'எதிர்நீச்சல்', 'இரு கோடுகள்', 'பாமா விஜயம்', 'வெள்ளி விழா' போன்ற படங்கள் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காதவை.







Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி