உங்கள் ஃபிட்னஸ்


உங்கள் ஃபிட்னஸ் லெவலை தெரிந்துகொள்ள வீட்டிலேயே இந்த 3 டெஸ்டு



ஒல்லியாக இருப்பவர்கள் அனைவரும் ஃபிட்டாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் கிடையாது. அதேபோல் பருமனாக இருப்பவர்கள் ஃபிட்டாக இல்லை என்பதும் அர்த்தம் கிடையாது. எனவே நீங்கள் உடல் பருமனாக இருக்கிறீர்களா அல்லது ஒல்லியாக இருக்கிறீர்களா என்பதை விட ஃபிட்டாக இருக்கிறீர்களா என்பதுதான் அவசியம்



சமீப நாட்களாக பலருடைய கவலை உடல் பருமன் ( obesity ). இதுவும் உடலின் மற்ற பிரச்னைகளை போல் ஒன்றாக மாறிவிட்டது. உடல் பலருமனை ஒட்டி உருவாகும் மற்ற உடல் நல பாதிப்புகள் இந்த பிரச்னையை மேலும் தீவிரமாக்குகிறது. எனவே பலரும் உடல் எடையைக் குறைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக உடற்பயிற்சி, டயட் போன்ற விஷயங்களை பின்பற்றி வருகின்றனர்.

ஆனால் அதில் பலர் தோல்வியடைகின்றனர். காரணம் முறையான பின்பற்றுதல் , உடல் எடைக் குறைப்பில் செய்யும் சில தவறுகள், பொருமையின்மை போன்ற காரணங்களால் உடல் எடை குறைக்கும் பயணத்தில் பலனடைவதில்லை.

பொதுவாக உடல் எடை அதிகரித்தல் என்பது உடலின் சதைப் பகுதியில் ஆங்காங்கே கொழுப்புகள் ஓர் இடத்தில் ஒன்றாகக் குவிவதுதான். இந்த கொழுப்பைக் குறைக்க வேண்டுமெனில் தீவிர உடல் உழைப்பு அவசியம். அதை முறையாக செய்பவர்களே வெற்றி காண்கின்றனர்.

அதேபோல் ஒல்லியாக இருப்பவர்கள் அனைவரும் ஃபிட்டாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் கிடையாது. பருமனாக இருப்பவர்கள் ஃபிட்டாக இல்லை என்பதும் அர்த்தம் கிடையாது. எனவே நீங்கள் உடல் பருமனாக இருக்கிறீர்களா அல்லது ஒல்லியாக இருக்கிறீர்களா என்பதை விட ஃபிட்டாக இருக்கிறீர்களா
 என்பதுதான் அவசியம். எனவே ஃபிட்னஸ் லெவலைக் (fitness level) கண்டறிய பிரபலங்களின் ஃபிட்னஸ் குயின் ருஜுடா திவேகர் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் மூன்று பரிசோதனைகளை செய்து பார்க்கச் சொல்கிறார். அந்த பரிசோதனையில் நீங்கள் பாஸ் செய்துவிட்டால் ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லையெனில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

இடுப்பு அளவை மதிப்பிடுதல் : அளவிடும் டேப் பயன்படுத்தி அடிவயிற்றிலிருந்து மூன்று கைவிரல் உயரத்தில் அளவிடுங்கள். அதாவது இடுப்பின் மிகவும் அகலமான பகுதி அதுவாகத்தான் இருக்கும். அப்படி சுற்றிலும் டேப் வைத்து அளவிடும்போது பெண்களின் சராசரி அளவு 0.7 முதல் 0.85 ஆகவும் ஆண்களுக்கு 0.85 முதல் 1 ஆக இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் எடையில் கவனம் செலுத்துவது அவசியம்.

அமர்ந்து கால் விரல்களை தொடுதல் : இது என்ன பெரிய விஷயமா என நினைக்காதீர்கள். சாதாரணமாக அமர்ந்தபடி தொடுவதல்ல. முதலில் நாற்காலியில் அமர்ந்துகொள்ளுங்கள். முதுகை நேராக வைத்து கால்களை மட்டும் உயர்த்தி நேராக வையுங்கள். சரியாக வயிற்றுப் பகுதி உயரத்திற்கு நீட்ட வேண்டும்


பின் இரு கைகளையும் கட்டை விரலை தொட முயற்சிக்க வேண்டும். அவ்வாறு சரியாக தொட்டு சில நிமிடங்கள் அப்படியே உங்களால் இருக்க முடிகிறதெனில் ஃபிட்டாக இருக்கிறீகள் என்று அர்த்தம். கணுக்கால்களை மட்டுமே தொட முடிகிறது எனில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

இதய துடிப்பின் அளவு : அதாவது இது ஓய்வாக இருக்கும்போது இதயத்தின் அளவை எடுக்க வேண்டும். நீங்கள் காலையின் தூங்கி எழுந்ததும் ஆக்ஸிமீட்டரை பயன்படுத்தி இதயத்துடிப்பின் அளவை கணக்கிடுங்கள். சராசரி அளவில் இருந்தால் ஃபிட்டாக இருக்கிறீகள் என்று அர்த்தம். ஆக்ஸிமீட்டர் இல்லை எனில் கைகளில் நாடித்துடிப்பை கவனியுங்கள்.






Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,