ஆரோக்கிய வாழ்வைத் தரும் அதிசய மூலிகை கரிசலாங்கண்ணி

 ஆரோக்கிய வாழ்வைத் தரும் 

அதிசய மூலிகை கரிசலாங்கண்ணி1   கல்லீரல் பலம் பெற 

     உடல் நோய்கள் அனைத்தும் நீங்க


   கரிசலாங்கண்ணி கீழாநெல்லி இவை இரண்டையும் இடித்து சம அளவாக பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து தினம் இருவேளை தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர கல்லீரல் பலம் பெறும்


   கல்லீரல் பலம் பெறுவதால் அதன் மூலம் உடல் உறுப்புகளின் இயக்கங்கள் அனைத்தும் சீராக இருக்கும்


  உடல் உறுப்புகளின் இயக்கங்கள் சிராக நடைபெறுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் இதன் மூலம் நம்மை நோயில்லாமல் வாழ வைக்கும் மேலும் உடலில் நோய் இருந்தாலும் அவை அனைத்தும் படிப்படியாக விலகி விடும்


மேலும் சில மருத்துவ பயன்கள்


உதாரணமாக


   கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் செரியாமை நோய் மற்றும் வயிற்றுவலி வயிற்றில் ஏற்படும் புண்கள் காய்ச்சல் ரத்தசோகை மஞ்சள் காமாலை பாண்டுரோகம் ரத்தக்கொதிப்பு இருதய நோய்கள் இரத்த வாந்தி இது போன்ற நோய்கள் உடலில் ஏற்படாது


   நோய்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்ற மலச்சிக்கல் நோய் நம்மை அணுகாது இதனால் நோயின்றி நாம் ஆரோக்கியமாய் என்றென்றும் வாழலாம்


2  கரிசிலாங்கண்ணி அமிர்த பால் 

     செய்முறை விளக்கம்


  தேவையான பொருட்கள்


கரிசலாங்கண்ணி 120 கிராம் 

                            சீரகம் 60 கிராம்     

             முசுமுசுக்கை 30 கிராம் 

                தூதுவளை  30 கிராம்


இவை அனைத்தையும் அளவுகளின்படி சூரணம் செய்து ஒன்றாக கலந்து கொண்டு இதில் மூன்று கிராம் பொடியை எடுத்து 


  இருநூறு மில்லி பசும்பாலில் கலந்து இதனோடு இருநூறு மில்லி தண்ணீரும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இதை லேசான சூட்டில் காலை வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் இருக்கின்ற தீராத உஷ்ணம் தணியும்


வெப்பத்தால் ஏற்படுகின்ற நோய்கள் அனைத்தும் தீரும் மல குற்றம் நீங்கும் மலம் இளகி சுத்தமாக வெளியேறும் இதனால் நோய் வருவது தடுக்கப்படும்


  பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி நீங்கும் கர்ப்பப்பை கோளாறுகள் குணமாகும்


  முக்கியமாக உடல் பருமன் குறையும் ரத்த அழுத்தம் நீங்கும் மொத்தத்தில் கரிசலாங்கண்ணியின் அமிர்தத்தைப் பருகி வந்தால் உடலில் நோய் எதுவும் அணுகாது


3  நோயின்றி வாழவைக்கும்

     கரிசலாங்கண்ணி சூரணம்


கரிசலாங்கண்ணி கொட்டைக்கரந்தை இரண்டையும் சம அளவாக பொடி செய்துகொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து தேனில் குழைத்து தினம் இரு வேளை நாற்பது நாட்கள் தொடர்ந்து இதை சாப்பிட்டு வர உடலில் சுருக்கம் ஏற்படாது தலையில் நரை விழாது முதுமை தோற்றம் உடலில் ஏற்படாது


  இவ்வளவு மருத்துவம் குணம் நிறைந்த இந்தச் சூரணத்தை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி இதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியத்தை உண்டாக்கும்


4  உடலில் தோல் சுருக்கம் நீங்க

    எப்போதும்.  அழகாக இருக்க


  கரிசலாங்கண்ணி இலையை கொண்டுவந்து மைபோல அரைத்து உடல் முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் தோலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கும் இதை தொடர்ந்து பயன்படுத்தி வர நாளடைவில் தேகம் பொன்னிறமாய் மாறும் எப்போதும் உடலில் அழகை நீடிக்க வைக்கும்


5 மந்தபுத்தி விலக 

   ரத்த சோகை குணமாக


தேவையான பொருட்கள்


    கரிசலாங்கண்ணி 

          சிறுசெருப்படை 

               குப்பைமேனி


  இவை அனைத்தையும் பொடிசெய்து சம அளவாகக் கலந்து இதன் மொத்த எடைக்கு சமமாக இதனோடு சீனி சர்க்கரை சேர்த்து இதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து இதை வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும் மந்தபுத்தி விலகும் 


 நீர்க்கட்டு மற்றும் மலக்கட்டு குணமாகும் மேலும் உடல் உஷ்ணம் தணிந்து பித்த நோய்கள் அனைத்தும் குனமாகும் மேலும் நோய் வராத வண்ணம் நம்மை பாதுகாக்கும்

   

   


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,