லேசர் மூலம் முடி அகற்றினால் உண்டாகும் பக்கவிளைவுகள்

 லேசர் மூலம் முடி அகற்றினால் உண்டாகும் பக்கவிளைவுகள்! 💚❤️



உடலில் இருக்கும் தேவையற்ற முடியை கை, கால்கள், அக்குள் பகுதி) நீக்குவதற்கு லேசர் பயன்படுத்துவதற்கு முன்பு அதன் பக்கவிளைவுகள் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். லேசர் மூலம் முடி அகற்றுதல் எளிதாக இருக்கிறது என்பவர்கள் இதன் பக்கவிளைவுகள் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். லேசர் பயன்படுத்தும் போது அது எரிச்சலை உண்டாக்கி அந்த இடத்தில் வடுக்களை உண்டாக்கிவிடும். இது குறித்த பக்கவிளைவுகளும் குறித்து தெரிந்துகொண்டால் நீங்கள் கவனமாக பயன்படுத்துவீர்கள்.


​லேசர் மூலம் முடி அகற்றுதல் பாதுகாப்பானதா?


லேசர் மூலம் முடி அகற்றுதல் பாதுகாப்பானதாகவு பயனுள்ளதாகவும் நினைக்கிறார்கள். இது குறித்து சுகாதார ரீதியாக அபாயங்கள் எதுவும் இல்லை என்றாலும் சிலருக்கு பக்கவிளைவுகள் உண்டாகலாம். லேசர் சிகிச்சையால் பாதிப்பை கொண்டிருப்பவர்கள் இது குறித்து சரும மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.


லேசர் முடி அகற்றுதலில் சருமத்துக்கு சேதம் விளைவிக்காமல் முடியை அகற்ற உதவுகிறது. இந்த செயல்முறை வேகமாக செய்தால் சிலர் பக்கவிளைவுகளை எதிர்கொள்ளலாம்.


​லேசர் பக்கவிளைவுகளை உண்டாக்குமா


லேசர் மூலம் முடிகளை அகற்றினால் நீங்கள் சில பக்கவிளைவுகளை எதிர்கொள்ளலாம். இவை எல்லாமே தற்காலிகமானவை. எனினும் சருமம் மோசமடைவதால் சரும மருத்துவரை அணுக வேண்டும்.


தோல் சிவத்தல் மற்றும் எரிச்சல் போன்றவை லேசர் மூலம் முடி அகற்றுதலின் பொதுவான பக்கவிளைவுகள் ஆகும். உடலின் முக்கியமான பகுதியிலிருந்து முடிகளை அகற்றினால் அதிகமாக இருக்கும். சருமம் மென்மையாக இருப்பதால் சிவத்தல் எரிச்சல் மற்றும் வீக்கத்தையும் உணரலாம். இந்த எரிச்சல் தற்காலிகமானது. இதற்கு ஐஸ்கட்டி ஒத்தடம் சரியாக இருக்கும்.


​சரும நிறத்தில் மாற்றங்கள் உண்டாகும்


லேசர் செயல்முறைக்கு பிறகு உங்கள் சருமம் நிறமாற்றங்கள் உண்டாகிறதா என்பதையும் கவனிக்கலாம். ஏனெனில் லேசர் பக்கவிளைவுகளில் இந்த சரும நிறமாற்றமும் ஒன்று.


குறிப்பாக மென்மையான சருமத்தை கொண்டிருப்பவர்களுக்கு கருமையான புள்ளிகள் பார்க்கலாம். இந்த மாற்றங்கள் தற்காலிகமானவை என்றாலும் கடுமையான நிறமாற்றம் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை சந்திப்பது நல்லது.


​தோல் உரிதல்


லேசர் செய்யப்பட்ட பகுதியில் இருக்கும் சருமம் பாதிக்கப்பட்ட பகுதியில் தோல் உரிதல் உண்டாக்கும். இது அரிதானது என்றாலும் இந்த பிரச்சனை வடுக்களை உண்டாக்கலாம். இந்த இடத்தில் மாய்சுரைசர் பயன்படுத்தலாம். இந்த பக்கவிளைவுகள் பொதுவானவை என்றாலும் அரிதான நேரங்களில் இவை கடுமையான பக்கவிளைவுகளை உண்டாக்கிவிடும்.


​அரிதான பக்கவிளைவுகள்


லேசர் முடி அகற்றுதலின் பக்கவிளைவுகளில் கருப்பு தோல் மாற்றம் , கொப்புளங்கள் (குறிப்பாக சூரியனின் புற ஊதாக்கதிர்கள் படும்போது) உண்டாகலாம். அமெரிக்க அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி லேசர் முடி அகற்றுதலை உரிய நிபுணர்களிடம் செய்ய பரிந்துரை செய்கிறது. லேசர் முடி நீக்கம் நிரந்தரமாக முடியை அகற்றாது. இது முடி வளர்ச்சியை தாமதப்படுத்த செய்யும்.


கர்ப்பக்காலத்தில் லேசர் மூலம் முடி அகற்றுவது பாதுகாப்பானது அல்ல. லேசர் மூலம் முடி அகற்றுவதற்கு முன்பு சரும பராமரிப்பு நிபுணரை அணுகி ஆலோசனை பெற்று பயன்படுத்துவதன் மூலம் பக்கவிளைவுகளை தவிர்க்கலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,