தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி சுற்றலாமா?

 தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி சுற்றலாமா? தெரிந்துகொள்வோமா?

குழந்தை எதையாவது பார்த்து பயந்து திருஷ்டி பட்டு, அதனால் சாப்பிடாமல் மெலிந்து போகும். அப்போது சிறிய குழந்தையாக இருந்தால் பூந்துடைப்பகுச்சியை கொளுத்தி திருஷ்டி சுத்தி போடுவது வழக்கம். கீழே விழுந்து அடிப்பட்டு கொண்டால், குழந்தை கீழே விழும் சமயம் நீங்கள் அங்கிருந்தால் கீழே கிடக்கும் செங்கல் துண்டு அல்லது மண்ணாங்கட்டியை குழந்தையின் தலையை மும்முறை சுற்றி தூக்கி போட்டு உடைத்து திருஷ்டி கழிக்கும் வழக்கம். ஆனால் குழந்தை அடிபட்ட சூழலில் சுற்றுவது கடினம் என்பதால் பலர் தூங்கும் சமயத்தில் சுற்றுவார் இது மிகவும் தவறான ஒன்றாகும். தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி சுற்றினால் ஆயுள் குறையும் என்பது சாஸ்திர நம்பிக்கை. அது திருஷ்டி சுற்றும் நோக்கத்தை பாதிப்படைய செய்யும். அத்துடன் எதிர்மறை விளைவுகளையும் தரவல்லது. திருஷ்டி சுற்றுவது மட்டுமல்ல குளிப்பது, அலங்காரம் செய்து அழகு பார்ப்பது என எல்லாமே குழந்தை விழித்திருக்கும் நிலையில் தான் செய்தல் வேண்டும். குழந்தை சாப்பிடாமல் போனால் ஒரு கை பிடி உப்பை எடுத்து கையை நன்றாக மூடிக்கொண்டு தாய்மடியில் விழித்திருக்கும் குழந்தையை இறுத்தி இடமிருந்து வலமாக மூன்றுமுறையும், வலமிருந்து இடமாக மூன்றுமுறையும் சுற்றி அப்படியே குழந்தையின் அம்மாவிற்கும் சுற்றி அந்த உப்பை தண்ணீரில் இடவேண்டும். தண்ணீரில் உப்பு கரைய கரைய திருஷ்டியும் கரைந்து குழந்தை சாப்பிட ஆரம்பிக்கும். கொஞ்சம் பெரிதான குழந்தைக்கு சோறு ஊட்டிய பின்னர் குழந்தையை கைகழுவ வைத்து தட்டில் மிச்சம் இருக்கும் சாப்பாட்டில் சுற்றி போடலாம். சாப்பிட போகும் முன் ஒரு உருண்டை சாதத்தை தட்டில் ஓரமாக எடுத்து வைத்து அந்த உணவை காகத்திற்கு போட செய்யுங்கள். இதுவும் ஒரு பரிகாரமே. இது ஒரு நல்ல விளைவுகளைத் தரும்.இப்படியாக குழந்தைகளுக்கு பலவகையில் திருஷ்டி சுற்றி போடலாம். ஆனால் தூங்கும் சமயத்தில் செய்வது மிக மிக தவறான ஒன்றாகும்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,