கீழாநெல்லி டானிக்

 கல்லீரலைப் பலப்படுத்தும் கீழாநெல்லி டானிக்!






தேவையானவை: வெள்ளைக் கரிசாலை, கீழாநெல்லி இலை - தலா 50 கிராம், மோர் - 100 மி.லி, சீரகத் தூள், இந்துப்பு -  தலா ஒரு சிட்டிகை,


செய்முறை: வெள்ளைக் கரிசாலை, கீழாநெல்லி இரண்டையும் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுதை மோரில் கலந்து, சீரகத் தூள், இந்துப்பு கலந்து, விருப்பப்பட்டால் ஆளி விதைகளை சேர்த்துக்கொள்ளலாம்.


யார் குடிக்கலாம்?



மது அருந்துபவர்கள், மதுவை நிறுத்திவிட்டு, எண்ணெய் உணவுகளைத் தவிர்த்துவிட்டு, தொடர்ந்து இரண்டு மாதங்கள் காலை, மாலை என இரு வேளையும் இந்தக் கல்லீரல் டானிக்கை அருந்தலாம். மதுவால் பாதிக்கப்பட்ட கல்லீரல் பரிபூர்ணமாகக் குணமாகும்.

மஞ்சள் காமாலை வந்தவர்கள், தொடர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் வயிற்றில், காலை நேரத்தில் இந்த டானிக்கைக் குடிக்கலாம்.

ஒரு வயது முடிந்த குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் வாரம் ஒருமுறை வெறும் வயிற்றில் இந்த மூலிகை சாற்றைக் குடித்துவர, கல்லீரல் ஆரோக்கியம் பெறும்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி