உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு எதுவும் இல்லாம தொப்பையை குறைக்க..

 

உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு எதுவும் இல்லாம தொப்பையை எப்படி குறைக்கலாம்...




தொப்பையால் அவதிப்படுபவர்கள், உடற்பயிற்சி அல்லது உணவு கட்டுப்பாடு இல்லாமல், இத்தகைய நடைமுறைகளை மட்டுமே


உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டு முறைகளிலேயே அதிக கவனம் செலுத்த முயல்வர். ஆனால், இது அவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக தோன்றும். இவர்களுக்காக, உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு இல்லாமலேயே உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

​உறக்கம் - தேவையான அளவிற்கு மட்டுமே

உடல் எடையை குறைக்க உதவும் மிகச்சிறந்த காரணி உறக்கம் ஆகும். நீங்கள் கடின உழைப்பு மேற்கொண்ட பிறகு, உங்கள் உடல் அமைந்திருக்கும் களைப்பை போக்க கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும். இதன்காரணமாக, நமது உடலின் எடை விகிதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்கிறது.

உறக்கம் சிறந்தது என்பதற்காக, அதிகநேரம் உறங்கி விடக்கூடாது. அதிகநேர உறக்கம், உடல் எடையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படவும் காரணமாக அமைந்து விடுகிறது.

​இனிப்பு உணவுகளை குறைத்து கொள்ள வேண்டும்


உணவு கட்டுப்பாடு என்பது, சர்க்கரை சத்து நிறைந்த உணவுகளை குறைந்த ற எடுத்துக் கொள்வது மட்டுமின்றி, மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை உள்ளடக்கியது ஆகும். சர்க்கரை நிறைந்த உணவு வகைகளை சிறிது அதிகம் எடுத்துக் கொண்டாலே, அதன் பாதிப்பு அபரிமிதமாக இருக்கும் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்

​உணவை நன்றாக மென்று சாப்பிடுதல்


உணவை நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலம், செரிமானம் சிறப்பாக நடைபெற வழிவகை ஏற்படுகிறது. இதுமட்டும்லாது, இவ்வாறு உணவை மென்று சாப்பிடுவதன் மூலம், வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இதன்காரணமாக, அதிகமாக உணவு உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது. உணவை மெதுவாக சாப்பிடுவதன் மூலம், குறைவான உணவே நம்மால் உண்ண முடிகிறது. இதன்காரணமாக, நமது உடலின் எடை எப்போதும் கட்டுக்குள் இருப்பதற்கான சூழல் உருவாகிறது.

​அதிக அளவு நீர் அருந்துதல்


உடல் எடையை குறைக்க உதவும் காரணிகளில், அதிக அளவு நீர் அருந்துதல் முதன்மை இடத்தை வகிக்கிறது. சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக, இந்த நீர் அருந்தும் முறை உள்ளது.

அதிக அளவு நீர் அருந்துவதால், செரிமானம் சீராகிறது. வயிறு எப்போதும் நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. உங்களுக்கு பசி உணர்வு ஏற்பட்டு உள்ளதா அல்லது தாகம் ஏற்பட்டு இருக்கிறதா என்று உங்கள் உடல் அடிக்கடி இந்த குழப்பத்திற்கு ஆளாகி விடுகிறது. இந்த குழப்பத்திற்கு, நீர் அருந்துதல் சிறந்த தீர்வாக அமைகிறது. இதன்மூலம், நீங்கள் பசி ஆக இருப்பதாக உணரும்போது மட்டுமே உணவை உட்கொள்ளும் எண்ணம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது

source:https://tamil.samayam.com/


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி