சூடான எலுமிச்சை தண்ணீர் உடல் கொழுப்பை குறைக்குமா

 சூடான எலுமிச்சை தண்ணீர் உடல் கொழுப்பை குறைக்குமா?- மருத்துவ நிபுணர் கூறுவது என்ன?








எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.


சூடான நீரில் எலுமிச்சை சாறை சேர்த்து குடிப்பது உடலுக்கு நன்மை தரும் என்று நம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் பரிந்துரைப்பது உண்டு. ஆனால் இந்த சூடான எலுமிச்சை தண்ணீர் குடிப்பது பயனுள்ளதா?


எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது  உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. ஆனால் சூடான தண்ணீர் கொழுப்பை கரைக்க உதவும் எனபதில் உணமையில்லை என்று ஊட்டச்சத்து மருத்துவ நிபுணர் கினிதா கடகியா பட்டேல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சூடான தண்ணீரில் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும் என்றால் அந்த மூடநம்பிக்கையை தகர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


எலுமிச்சை நீர் சாதாரண நீரைவிட எடையைக் குறைக்க பெரிதாக பயனளிக்காது. ஆனாலும் அதிக கலோரி கொண்ட பானத்தை விட  எலுமிச்சை குறைந்த கலோரி கொண்டுள்ளதால் இதை எடை குறைப்புக்கு பயன்படுத்தலாம்.  எலுமிச்சை நீரின் பிற ஆரோக்கிய நலனைப் பொருத்தவரை இது நீரேற்றத்தை சீராக வைக்கும். சருமத்திற்கு பொலிவு தருகிறது. வைட்டமின் சி தோல் சுருக்கம், வறண்ட சருமம், வயதான தோற்றத்தை மாற்றும் மற்றும் சூரியனில் இருந்து வரும் கதிர்களால் முகத்தில் ஏற்படும் தீங்கை குறைக்கிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,