முகப்பரு முதல் மூட்டு வலி வரை தீர்வு தரும் பூண்டு எண்ணெய்.

 முகப்பரு முதல் மூட்டு வலி வரை தீர்வு தரும் பூண்டு எண்ணெய்.

உடலின் காயம், வலி என ஏதாவது ஏற்பட்டால் பொதுவாக எல்லோர் வீட்டிலும் பரிந்துரைக்கப்படுவது தேங்காய் எண்ணெய் தான். ஆனால் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்கள் மட்டுமில்லாமல் வேறு சில இயற்கை எண்ணெய்களும் பல உடல்நல நன்மைகளை வழங்கக் கூடியவை தான்.


அப்படி பல சிறப்புகள் வாய்ந்தது தான் பூண்டு எண்ணெய். இந்த பூண்டு எண்ணெய்க்கு பல மருத்துவ குணங்கள் உண்டு. காதுகளில் ஏற்படும் பூஞ்சை தோற்று, முகப்பரு, மூட்டு வலி, தவைமுடி உதிர்வு போன்ற பல பிரச்சனைகளை தீர்க்க கூடிய அளவிற்கு பூண்டு எண்ணெயில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.


முகப்பருவுக்குத் தீர்வு:


 முகப்பருவுக்கு இயற்கையான பேஸ் பேக் பயன்படுத்தும் போது பூண்டு எண்ணெயையும் கலந்து பூசி பயன்படுத்தலாம். ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி முல்தானி மிட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனோடு 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், மூன்று சொட்டு பூண்டு எண்ணெய் விட்டு கலந்து கொள்ளவும். பிறகு சிறிதளவு அரிசி கஞ்சியை சேர்த்து ரொம்பவும் தண்ணியாக இல்லாமல் முகத்தில் தடவக் கூடிய பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த ஃபேஸ் பேக் நீங்கள் உங்கள் முகத்தில் பயன்படுத்துவதால் முகப்பருவால் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, தொடர்ந்து ஏற்படாமல் தடுக்க முடியும்.

காதில் ஏற்படும் 


பூஞ்சைத் தொற்று: 


காதுகளில் ஏற்படும் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க தேங்காய் எண்ணெய் உடன் பூண்டு எண்ணெயைச் சேர்த்து கலந்து தடவலாம். இதற்கு முதலில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை அடுப்பில் வைத்து காய்ச்சி அதில் இரண்டு பல் பூண்டு பற்களை நசுக்கி சேர்க்க வேண்டும். எண்ணெயின் நிறம் மாறியதும் அதனை ஒரு காட்டன் துணியில் ஊற்றி கசக்கி பிழிந்து வரும் அந்த எண்ணெயை தொற்று இருக்கும் இருக்கும் காதில் பயன்படுத்தி வந்தால் வலி குறையும். உள் காதில் இருக்கும் தொற்றுக்கு இதனை பயன்படுத்த வேண்டாம்.தலைமுடி உதிர்வதை தடுக்க: 


பூண்டு எண்ணெய் தலைமடி உதிர்வதை தடுத்து மேலும் முடி வேகமாக வளர உதவி செய்கிறது. இதற்கு ஒரு வானலியில் நல்லெண்ணெயை சூடு செய்து அதில் சீரகம், இஞ்சி, கருப்பு மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்க்கவும். அனைத்தும் கோல்டன் கலராக மாறிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தலைமுடியின் வேர்களில் தடவினால் முடி உதிர்வது நிற்று முடியும் நன்றாக வளரும்.மூட்டு வலிக்கு:இந்த பூண்டு எண்ணெயை மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற தடவி வரலாம். அதற்கு ஒரு கப்பில் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதில் பத்து துளி பூண்டு எண்ணெயை விட்டு கலந்து மூட்டு வலி இருக்கும் இடத்தில் தடவிக் கொள்ளலாம். இது வீக்கத்தை குறைத்து வலியில் இருந்து நிவாரணம் தரும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,