சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது.

 கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது.இன்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டு, மாதாந்திர பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின் நாளை முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளது.
கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு ஜூலை 17 முதல் 21-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு கோயிலுக்கு வர பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தினசரி 5,000 பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா்.
அவா்கள் முன்கூட்டியே இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
கோயிலுக்கு வரும் பக்தா்கள் கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கோயிலுக்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ஆா்டிபிசிஆா் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டு, தங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும்.

6

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,