சார்பட்டா பரம்பரை எனது பார்வையில்

 

சார்பட்டா பரம்பரை


 

எனது பார்வையில்


 




 

 

நேற்று ஒரு நல்ல தமிழ் திரைப்  படம் OTT. அமேசான் prime   பார்த்தேன். படம்: சார்பட்டா பரம்பரை

.தமிழ் திரைப்படங்கள் விமர்சனம் பண்ற அளவுக்கு வருவது இல்லை.

ஆனா இந்த படம் பார்த்த முதல் இப்ப வரை இந்த படம் கண் முன்னால வருது.

ஏறக்குறைய அனைத்து கதா பாத்திரங்களும் மனசுல ஒட்டி கொள்ளறாங்க

ஆர்யா கபிலன் பத்திரமா மாறி விடுகிறார் .

இவருக்கு பின் பசுபதி. ஜான் விஜய். டான்சிங் ரோஸ் பாத்திரம் ஏற்று நடித்த ஷபீர்  மனதை அள்ளிட்டாங்க .

நாம எப்பவும் பார்க்கிற நடிகர்கள் இந்த படத்தில் நடித்து இருந்தால்

அந்த நடிகர்கள் தான் நினைவுக்கு வருவார்கள்,

அவங்க எவ்வளவு கஷ்ட பட்டு நடித்தாலும் அவங்க கதா பாத்திரம் நினைவில் தங்குவது இல்லை (நடிகர் திலகம். கமல். இவங்க விதி விலக்கு )பல கேரக்டர் நடிகர்கள் அந்த காலத்தில் நடித்தார்கள். . ம். ரங்கா ராவ். S.V..சுப்பையா. எம் .ஆர் ,ராதா இவங்கள போல் பலர்

நமக்கு அறிமுகம் இல்லாதவர்களை நாம பார்க்கும் போது நமக்கு அவங்களைவிட அவங்க நடித்த கதா பாத்திரங்கள் கண் முன்னே வரும் .

அந்த விதத்தில் சார்பட்டா பரம்பரை அப்படிதான்

 

நான் எட்டாவது படித்து கொண்டு இருக்கும் போது என் அப்பா குத்து சண்டை மேட்ச் பார்த்தது பற்றி சொல்வார்

நாங்க இருந்தது ஓட்டேரி T.B.ஹாஸ்பிடல் பகுதி

அப்பா பி &சி மில்லில் வேலை பார்த்து கொண்டு இருந்த காலம் அது

இந்த குத்து சண்டை கார்பொரேஷன் ஸ்டேடியம். மூர் மார்க்கெட் பின் புறத்தில் இருந்தது .அங்கு நடக்கும் .

அப்புறம் கண்ணப்பர் திடல் . நடராஜ் தியேட்டர் எதிர்புறம். இப்போ பழைய இரும்பு வாங்கற கடைகள் ஆகிவிட்டது

அங்கே நடக்கும் .அப்பா பிட் நோட்டீஸ் கொண்டு வருவார் அதிலே பலர் கைல கிளவுஸ் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்திருப்பாங்க,

பார்த்து இருக்கேன் ,

அதே போல் செட் போட்டு அந்த காலத்தில் நடக்கிற சம்பவங்களாக கதை களம் அமைத்து படத்தை வெற்றி யடைய செய்து இருக்கார் ,ரஞ்சித்

அப்பல்லாம் நண்பர்ர்ளுடன் சண்டை போட்டு கொள்வோம் .

நாங்க ஆளுக்கு ஆளு நான்சார் பட்டா டா’ என் மேல் கை வை பார்ப்போம் என பேசிக்கொண்டு சண்டை போடுவோம் .கைகளில் துணிய பந்துக போல சுற்றி சண்டை போடுவோம்

அப்போ எனக்கு சுத்தமா சார்பட்டா னா என்னனு தெரியாது

இப்ப தெரிந்தது?

எங்க ஏரியா வட சென்னை பகுதி ,90% பாமர ஜனங்க

இப்போ விமர்சனம் விமர்சனம் என்பதைவிட என் கருத்துகள் என சொல்லிவிடறனே

 பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துசண்டையை மையமாக வைத்து ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

 

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக காலா திரைப்படம் வெளியான . 3 வருடங்களுக்கு பிறகு ,இந்த படத்தின் மூலம் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார்.

வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு சென்ற போதிலும் அவர்கள் நம்மிடத்தில் விட்டுச்சென்ற பொழுதுபோக்கு விளையாட்டான குத்துச்சண்டை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது  அதனை பின்புலமாக வைத்து படத்தின் கதையை தயார் செய்துள்ளார்

பல தமிழ் சினிமாவில் பல விதமாக எடுக்க பட்ட ஒன் லைன்  பாக்ஸிங் கதைதான்

இதுவும் .கணவனை இழந்த ஒரு பெண் தன் மகனையும்  இந்த பாக்ஸிங்கால் இழந்து விடக்கூடாது என்று போராடுகிறாள் ., இருந்தாலும் காட்சி அமைப்பு திரைக்கதை அமைத்த  விதம் மற்றும் சில உயிரோட்டமான சம்பவங்களை சேர்த்து

ஒரு முந்தைய கால கட்ட நிகழ்வுகளைஇந்த படத்தில் தந்து வெற்றி பெற்றிருக்கிறார்  பா .ரஞ்சித்

.

வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டை இதை

சார்பட்டா பரம்பரையும் இடியாப்ப பரம்பரையும் கால காலமாக மோதி வருகிறது. ஆரம்பகாலத்தில் கை ஓங்கி நின்று சார்பட்டா பரம்பரை இடியாப்ப பரம்பரையிடம் தோற்றுக்கொண்டே வருகிறது

கடைசியாக ஒரு சண்டை இதில் நான் தோற்றால், சார்பட்டா பரம்பரை இனி களத்தில் இறங்காது என பசுபதி சவால் விடுகிறார். அதன் பிறகு பாக்ஸிங் அனுபவமே இல்லாத கபிலன் (ஆர்யா) களத்தில் இறங்குகிறார். சார்பட்டாவின் சாம்பியனாக வந்து இடியப்ப பரம்பரையின் பாக்ஸரான வேம்புலியுடன் (ஜான் கொக்கன்) மோதுகிறார். இறுதியில் யார் வென்றர்கள்? சார்பட்டா பரம்பரைக்காக வெற்றியை தேடி தந்தாரா? என்பதுதான் படத்தின் கதை.

இந்த படத்திற்காக ஆர்யா கடின உழைப்புடன் நடித்துள்ளார். தனது உடல் எடையை ஏற்றியும், அதனை குத்துச்சண்டை வீரர் போல மெருகேற்றியும் நடித்துள்ளார். ஆர்யாதான்  கபிலன் . அவருக்காகவே வடிவமைத்த கதை போல கதையுடன் ஒன்றி சிறப்பான தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குத்துச்சண்டை போடும் காட்சிகளை நம்மை அறியாமல் அவருக்கு குரல் கொடுக்கிறோம்

 ரோஷமான சண்டையை செய்துள்ளார்.

.இந்த படத்திற்காக ஆர்யா எடுத்து கொண்ட உடல் பயிற்சி , பாக்சிங் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது . வழக்கமான தனது பல படங்களின் சாயல் வராமல் பார்த்து கொண்டு ஒரு பீரியட் ஃபிலிமுக்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து அசத்தி உள்ளார் ஆர்யா .

 

இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா நடித்துள்ளார். மாரியம்மா எனும் கதாபாத்திரத்தில்  மிக நேர்த்தி. காதல் , கோவம் , பாசம் , வீரம் , வெட்கம் ,சத்தம் கொஞ்சம் முத்தம் என்று எல்லா விதமான உணர்ச்சிகளையும் காட்டும்  பாத்திரம்  வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி மாரியம்மாவாக மிரள வைக்கிறார்  துஷாரா .முதல் இரவு காட்சியில் குத்தாட்டம் ஆடி விட்டு கட்டிப்பிடிப்பது குறும்பு

 ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக கை தட்டு வாங்கும் காட்சி

 

தாயாக கபிலனுடைய ( ஆர்யா ) அம்மாவாக அனுபமாகுமார் அழுகை ,பாசம் என்று கிடைத்த வாய்ப்பை நன்கு பயன் படுத்தி இருக்கிறார் .

 

.இவரை அடுத்து லக்ஷ்மி எனும் கதாபாத்திரத்தில் சஞ்சனா நடராஜன் ஜகமே தந்திரம் படத்தில் ஒரு பாடலில் மட்டும் நடனமாடி ட்ரெண்ட் ஆன இவர் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அழுத்தமான முக்கியமான காட்சிகள் இவருக்கு கிடைத்ததுள்ளது

 

வாத்தியாராக நடித்துள்ள பசுபதி அந்த கதாபாத்திரமாகவே மாறி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தி மிகச்சிறந்த நடிகன் என்பதை மீண்டும் நிலை நாட்டியுள்ளார்.

 

அதிகமான கதாபாத்திரங்களின் நடுவே  டாடி என்று செல்லமாக அழைக்க படும் ஜான் விஜய் கதாபாத்திரம் மனதில் நிற்கும் . ஜான் விஜய் பேசிய ஆங்கில வசனங்கள் , வார்த்தைகளின் உச்சரிப்பு பாடி லாங்குவேஜ் அனைத்தும் தனித்துவத்துடன் நம்மை ரசிக்க வைக்கிறது இந்தப் படம் அருமையாகக் கைகொடுத்துள்ளது. பல காட்சிகளில் என்ன நடிப்புடா என்று பாராட்ட வைத்துள்ளார்.

இவரை பார்க்கும் போது என்னுடைய தாத்தா நினைவுக்கு வரறார், அவரு பிஅண்ட்ச சி மில்ல மானேஜர் .நல்லலா இங்கிலீஸ் பேசுவார், பல ஆங்கிலோ இந்தியன் நண்பர்கள் , அவருக்கு. தாத்தவோட அவங்க பேசும் போது தமிழ் ஆங்கிலம் கலந்து அடிப்பாங்க /பிளடி பிளாகர் வார்த்தை மிக சரளமாக வரும் .நான் சின்ன பையன் அப்போ,ஒன்னும் புரியாது

இவர்க்கு ஜோடி மிஸ்ஸியம்மா பாத்திரத்தில் பிரியதர்ஷினி ராஜ்குமார் எதார்த்தம். Dance கலக்கல் 

 

மெட்ராஸ், கபாலி போலவே இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் கலையரசன் நடித்துள்ளார்

. சார்பேட்டாவுக்கு எதிர் அணியாக இடியாப்ப பரம்பரையின் வழிகாட்டியாக ஜி.எம் சுந்தர் எதார்த்த வசனங்களை பதார்த்தமாக பதம் பார்க்கிறார்

  

பசுபதியின் இன்னொரு நம்பிக்கைக்குரிய சிஷ்யன் சந்தோஷ் பிரதாப்,

அவருடைய மாமா வேட்டை முத்துக்குமார்,

டான்ஸிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ள ஷபீர்,அதகளம் செய்துள்ளார். அந்த சண்டைக்காட்சி, அதற்கான பில்டப், அந்த சண்டைக் காட்சி நடக்கக் காரணமான களம் என நடக்கும் விஷயங்கள் எல்லாம் பார்க்கும் போது 'மெட்ராஸ்' எடுத்த இரஞ்சித் திரும்ப வந்துவிட்டார் என்று சொல்லலாம்.

 

 பாக்ஸிங் மேட்ச்சுகள் மூலமாகவே சம்பாதிக்கும் காளி வெங்கட், பாக்ஸிங் கமெண்ட்ரியில் குரல் மூலமாகவே நமது மனதில் நிற்கும் பழைய ஜோக் தங்கதுரை, மாஞ்சா கண்ணனாக நடித்துள்ள மாறன், பீடி ராயப்பன் கதாபாத்திரம், காவி உடையில் பட்டை அடித்துக் கொண்டு பசுபதியுடன் வரும் கதாபாத்திரம்,பிரியதரிசினி ராஜ்குமார்,கிசோர், வேட்டை முத்துக்குமார் என இந்தப் படத்தில் நடிகர்களாகத் தெரியவில்லை. அந்தந்த கதாபாத்திரங்களாக மனதில் பதிந்துள்ளார்கள்

. . வட சென்னையின் வாழ்க்கை அந்த வட்டார வழக்கு என்று வசனங்கள் வரும் போது கொஞ்சம் கெட்ட வார்த்தைகளும் வருகிறது. சென்னையில் அதிகம் கேட்ட வார்த்தைகளையும் எல்லா கதாபாத்திரங்களும் பயன்படுத்துகிறார்கள்

 

.. தொழில்நுட்ப ரீதியாக படக்குழுவினர் மிகவும் மெனக்கெட்டுள்ளனர். சின்ன திரையிலேயே அவர்களுடைய உழைப்பு நமக்கு அமேசான் வழியாக கண்கூடாக தெரிகிறது.

 படத்தின் கலை இயக்குனர் ராமலிங்கம் 780'களில் இருந்த வடசென்னையை பிசிறு தட்டாமல் வடிவமைத்துள்ளார்

நான் சிறு வயதில் சுற்றிய இடங்கள் அவை

பி அண்ட்  சி மில் சுற்றுபுறம். சால்ட் கொட்டா, பேசின் பிரிட்ஜ் புகையை கக்கும்  பிரமாண்டமான புகை போக்கிகள்

சூளை ,பட்டாளம்,மணிக்கூண்டு,

புளியந்தோப்பு இப்படி அந்தக்கால இடங்கள்

 குத்துச்சண்டை மைதானம் செட்டும் வியக்க வைக்கிறது. இதனை காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் முரளி முக்கிய பங்கு வகித்துள்ளார். குத்துச்சண்டை மைதானம், சண்டையை காட்சிப்படுத்திய விதம் பிரமிப்பின் உச்சம்

படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்திற்கு பலம்

. பாடல்கள், பின்னணி இசை ஆகியவை சிறப்பு

.நீயே ஒளி நீ தான் வழி பாடல்பிரமாதம்

 படத்தொகுப்பாளர் செல்வா, சண்டை பயிற்சிக்கு அன்பறிவு என படக்குழு சிறப்பாக செயல்பட்டுள்ளது. அன்பறிவு மீண்டும் இந்த படத்திற்காக பல விருதுகள் வாங்க வாய்ப்பு உண்டு என்பது பல காட்சிகளில் தெரிகிறது

சண்டைக் காட்சிகளில் வரும் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது

 

ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம், சவுண்ட் டிசைனர் ஆண்டனி ரூபன், கலை இயக்குநர் ராமலிங்கம், கலரிஸ்ட், தயாரிப்பு வடிவமைப்பு என்று அனைவருமே படத்தின் கதைக்களத்துக்கு அபாரமான உழைப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இந்த படத்தை நாம்  கண்டிப்பாக குடும்பத்துடன் உட்கார்ந்து காணலாம் என்பது மிக பெரிய ஒரு பிளஸ் . பாக்ஸிங் பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் நிறைய தெரிந்த கொள்ள எதிர்கால இளைஞர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

 

இரண்டு பரம்பரை பாக்ஸிங் செய்து சண்டை போடுவதும் , அதற்கு நடுவில் அரசியல் வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் நன்கு அலசி ஆராய்ந்து , தமிழ்நாட்டில் எமர்ஜென்சி காலகட்டத்தில் நடந்த பல நிகழ்வுகளையும் ரீவைண்ட் செய்து காட்டி உள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்

. திமுக அதிமுக போன்ற கட்சிகளின் அன்றைய நிலைப்பாடு ,தலைவர்கள் எடுத்த முடிவுகள் , பாமர மக்கள் சந்தித்த விளைவுகள் இதற்கு மத்தியில் பாக்ஸிங் ஸ்போர்ட் அதற்கு மக்கள் கொடுத்த சப்போர்ட்

ஒரு பக்கா சர்வே கொடுக்கிறது இந்தப்படம்

 வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு குத்து சண்டையை உயிர் மூச்சாக நினைத்து வாழ்ந்தவர்கள் ,அவர்களது எண்ணங்கள் என்று மிகவும் அருமையாக யோசித்து கதாபாத்திரங்களுக்கு நல்ல நடிகர்களை சரியாக தேர்வு செய்தது ரஞ்சித்தின் மிக பெரிய வெற்றி

. படத்தின் முழு கதை மூல கதை என்பது எத்தனை முறை சண்டை போட்டார்கள் எந்த பரம்பரை வெற்றி பெற்றது என்பது தான் .

 

படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் தான் என்று பலர் சொன்னாலும் பீரியட் ஃபிலிம் என்று வரும்போது அதை இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்தி  சில காட்சிகள் ட்ரிம் செய்து இருக்கலாம் ., இருந்தாலும்

பரபரப்பான சுவாரஸ்ய காட்சிகளுடன் படம் நகர்வதால் தெரியவில்லை

. அந்தக் கால பாக்ஸிங் முறை, அதிலிருக்கும் நுணுக்கங்கள் என திரையில் காட்டுவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறார்கள்

 படத்தின் முதல் பாதி மிக வேகம் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்துடன் ஆர்யா சண்டையிடும் முதல் ஒன்னே கால் மணி நேரத்தையே தனிப்படமாக எடுத்து, மிச்சக் கதையை 2-ம் பாகம் என்று வெளியிட்டு இருக்கலாம்போல. அந்த அளவுக்கு ஒரு மணி நேரம் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.

 இதிலேயே படம் முடிந்துவிட்டதே, இதற்குப் பிறகு என்னவென்று யோ இரண்டாம் பாதி சற்று மிதமான வேகத்தில் நாயகனின் வீழ்ச்சிக்குப் பிறகு எழுவது  என கதை நகர்கிறது

கதையில் புதிதாக ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்க்கிறவர்களுக்கு இந்தப்படம் சற்று ஏமாற்றம்தான்‘

 இந்தக் களத்தில் வந்த சிலகாட்சிகள் பல பழைய  படங்களின் காட்சிகளை ஞாபகப்படுத்துகிறது. ஒரு முக்கியமான காட்சி 'பரியேறும் பெருமாள்' படத்தையும் ஞாபகப்படுத்துகிறது.

அடுத்து நாயகி கதாபாத்திரத்துக்குக் கதையில் முக்கியத்துவம் இருந்தாலும் 'மெட்ராஸ்' கத்ரீன் தெரசா, 'கபாலி' ராதிகா ஆப்தே என்று ரஞ்சித்தின் முந்தைய படங்களின் நாயகிகள் மனதில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை‘

. ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக நகரும் கதை இரண்டாவது பகுதியில் ல் வெறும் டிராமாவாக மாறும்போது படத்தின் விறுவிறுப்பு குறைகிறது. கடைசி அரை மணி நேரத்தில் விறுவிறுப்பு கூடினாலும் முதல் பாதியிலிருந்த சுவாரசியம் அளவுக்கு இல்லை. அதற்கு முடிவு என்ன என்பது தெரிந்து கதை நகர்வது ஒரு காரணமாக இருக்கலாம்.

பரம்பரையோட எதுக்குடா மானத்தைக் கொண்டுவந்து சேர்க்கறீங்கன்ற ஒரு வசனத்தையே சமுதாயத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு எது காரணமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்

மொத்தத்தில் இந்த 'சார்பட்டா பரம்பரை' படத்தில் எப்படி ஆர்யா தனது கதாபாத்திரத்தின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு சண்டைக்கு தயார் ஆகிறாரோ, அதே போல் இரஞ்சித் தனது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள படம்.




 திரையரங்கில் பார்க்க முடியவில்லையே என்பதில் வருத்தம்தான்

சில ரஞ்சித் டச் up சீன்ஸ் 

1.பசுபதி ஜெயிலில் இருந்த விடுதலை ஆகி வீட்டுக்கு வந்து குடும்பத்துடன் சாப்பிடும் போது 

பசுபதி மனைவி அவரின் கால் விரல்களை ஆசையா நிமுண்டி சாப்பிடுங்க நல்லா என மனைவிகுரிய நாணம். தெரியும். பசுபதியும் சாப்பிடறேண்டி என சொல்ல புருஷன் பொண்டாட்டி அன்னோன்யம் தெரியும் காட்சி மிகவும் எதார்த்தம் 

2.. மறுநாள் வேம்புலியுடன் பைனல் சண்டை 

ஆர்யா வ தூங்கு விடாமல் துஷாரா பேச எங்கே ஆர்யா துவுண்டுவிட போறாரு னு v

பீடி ரயாப்பன் பதறும் காட்சியும் மிகவும் எதார்த்தம் 


ரஞ்சித் பற்றி இந்த கால கட்ட இளைஞர். எப்படி 70ல இருந்த கால கட்ட பின்னணி கதையை அவரால் பயணம் செய்ய முடிந்தது. எப்படி அந்த காட்சிகள் மிகவும் உயிரோட்டமா இருக்கிறது என்பது மிகவும் ஆச்சர்யம்

--உமாதமிழ்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி