மார்சீஸ் கக்லி எல்மோ மார்க்கோனி’

 மார்க்கோனி காலமான தினமின்று


முழுப்பெயர், ‘மார்சீஸ் கக்லி எல்மோ மார்க்கோனி’.
1905-ம் ஆண்டில் பியட்ரைஸ் என்ற பெண்ணைத் தனது வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டார். தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சிக்கு இடையூறாக இருந்த அவரை விவாகரத்துச் செய்துவிட்டு, 1927-ல் மரியா கிறிஸ்டினா என்பவரை மார்க்கோனி திருமணம் செய்துகொண்டார்.
இரண்டாவது மனைவியின் நல்ல ஒத்துழைப்பால் மார்க்கோனி பல கருவிகளைக் கண்டுபிடித்து உலகுக்கு வழங்கினார். செய்தி பரப்பும் கம்பியில்லாத் தந்தி சாதனத்தைக் கண்டுபிடிக்க தனது மனைவி பெரும் உதவியாக இருந்ததாக மார்க்கோனி தான் எழுதிய ஆரய்ச்சி நூல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
மார்க்கோனி வடிவமைத்த சாதனங்களை விலைகொடுத்து வாங்கியவர்கள் பெரும் பணக்காரர்களாக ஆகினர்.
இவர் கண்டுபிடித்த கருவி மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து ரேடியோ செய்திகள் 1899-ல் அனுப்பப்பட்டன. அதேபோல் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து ரேடியோ செய்திகள் 1901-ம் ஆண்டு வெற்றிகரமாக அனுப்பப்பட்டன.
மார்க்கோனிக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1909-ம் ஆண்டு வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிறைய விருதுகள், பரிசுகள், கவுரவப் பட்டங்களையும் பெற்ற பெருமை இவருக்கு உண்டு.
ரோம் நகரில், தன் 63-ம் வயதில் இதே20.7(1937)ல் அம்மை நோயால் அவதியுற்று மரணமடைந்தார்,

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,