முகப் பொலிவு தரும் தேங்காய்ப் பால்.

 முகப் பொலிவு தரும் தேங்காய்ப் பால்....உபயோகிக்கும் வழி முறைகள்.

தேங்காய் பாலில் அதிகளவு நல்ல கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. மேலும், இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ காரணமாக இது நமது முகத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கவும் உதவுகிறது. தேங்காய்ப்பால் நமது சருமத்திற்கு ஒரு நல்ல இயற்கையான மாய்ஸ்ட்ரைசர் ஆகவும் செயல்படுகிறது.


 


ப்ரீரேடிகல் செல்களால் ஏற்படக்கூடிய சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பதுடன், சூரியனின் புற ஊதாக் கதிர்கலிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்கவும் இது உதவுகிறது.இத்தனை நன்மைகள் கொண்ட தேங்காய் பாலின் மூலம் எப்படி முக அழகை பராமரிப்பதற்கான ஃபேஸ் பேக் செய்வது என்பது குறித்த சில இயற்கையான வழிமுறைகளை நாம் தெரிந்து கொள்வோம்.


ரோஸ் வாட்டர்


நன்மைகள் : 


ரோஸ் வாட்டர் நமது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்கு பெரிதும் பயன்படுகிறது. மேலும், இந்த ரோஸ் வாட்டரை முகத்தில் பயன்படுத்தும் போது முகம் புத்துணர்ச்சியுடன் முக சுருக்கங்கள் இன்றி காணப்படும்.


உபயோகிக்கும் முறை : 


முதலில் ஒரு ஸ்பூன் தேங்காய் பால் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கொள்ளவும். பின்பு இதனை நன்றாக கலந்து கொள்ளவும். இதை ஒரு பஞ்சு வைத்து முகம் முழுவதும் தடவி விடவும்.


இடைப்பட்ட காலம் : இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர வைத்து விட்டு, அதன்பின் தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட பயன்படுத்தலாம். தொடர்ந்து இரண்டு வாரங்கள் செய்து வரும் பொழுது நிச்சயம் முகத்தில் நல்ல பொலிவு கிடைக்கும்.


 


தேன் & பாதாம்


நன்மைகள் : 


தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. எனவே இதை தேங்காய் பாலுடன் கலந்து முகத்தில் தடவும் பொழுது முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்க உதவுவதுடன், முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும் இது பெரிதும் உதவுகிறது.


உபயோகிக்கும் முறை : 


இரவு நேரம் ஐந்து பாதாமை எடுத்து தண்ணீரில் ஊற வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் காலையில் இதை ஒரு பேஸ்ட் போல தயாரித்து, இதனுடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் பால் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலந்து வைத்துக் கொள்ளவும். பின் இதை முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.


இடைப்பட்ட காலம் : 


முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்குப் பின் நன்றாக மசாஜ் செய்து வெறும் தண்ணீரில் கழுவிட வேண்டும். இந்த கலவையை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.


 


ஓட்ஸ்


நன்மைகள் : 


ஓட்ஸை தேங்காய் பாலுடன் கலந்து முகத்தில் தடவினால் நிச்சயம் முகம் பளபளப்பாக மாறுவதுடன் மட்டுமல்லாமல் முகத்திலுள்ள சுருக்கங்களும் மறையும்.


உபயோகிக்கும் முறை : 


அரை கப் ஓட்ஸ் எடுத்து அதை நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும். இதிலிருந்து ஒரு ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் அதை பேஸ்ட் போல தயாரிக்க தேவையான அளவு தேங்காய்ப்பால் கலந்து நன்றாகக் கிளறிக் கொள்ளவும். பின் இதை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.


இடைப்பட்ட காலம் : 


இதை முகத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். அதன் பின் தண்ணீரால் முகத்தை கழுவி விட வேண்டும். இதை வாரத்திற்கு இரு முறை உபயோகிக்கலாம்.


 


தயிர்


நன்மைகள் : 


தயிரை முகத்தில் உபயோகிக்கும் பொழுது சருமத்திற்கு புத்துணர்ச்சி கிடைப்பது மட்டுமல்லாமல், சருமத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கும், இறந்த செல்களை அகற்றுவதற்கும் இது பெரிதும் உதவுகிறது.


உபயோகிக்கும் முறை : 


ஒரு ஸ்பூன் புதிய தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் பாலை கலந்து பேஸ்ட் போல தயாரித்துக் கொள்ள வேண்டும். பின்பு முகத்தில் இந்த பேஸ்ட்டை தடவி இரண்டு மூன்று நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து விட வேண்டும்.


இடைப்பட்ட காலம் : அதன் பின் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து இதை தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உபயோகிக்கலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,