காலிஃப்ளவர் முட்டை சப்ஜி

 

காலிஃப்ளவர் முட்டை சப்ஜி


சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? 

அப்படியானால் காலிஃப்ளவர் மற்றும் முட்டை இருந்தால், அதைக் கொண்டு ஒரு சப்ஜி செய்யுங்கள். இந்த சப்ஜி மிகவும் ஆரோக்கியமானது மட்டுமின்றி, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும் இருக்கும்.

காலிஃப்ளவர் முட்டை சப்ஜியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது

தேவையான பொருட்கள்:

 * காலிஃப்ளவர் - 2 கப் (சுத்தம் செய்து நறுக்கியது) * எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன் * வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) * தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் * மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் * கரம் மசாலா - 1 டீஸ்பூன் * உப்பு - சுவைக்கேற்ப * முட்டை - 3 

செய்முறை: * 


முதலில் சுத்தம் செய்து வைத்துள்ள காலிஃப்ளவரை சுடுநீரில் போட்டு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். * பின்னர் வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும். * பின்பு காலிஃப்ளவரை போட்டு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட்டு மூடி வைத்து, சிறிது நேரம் காலிஃப்ளவரை வேக வைக்க வேண்டும். * பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு தக்காளி வேகும் வரை வேக வைக்க வேண்டும். * அடுத்து அதில் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். * பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி, வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் முட்டை சப்ஜி தயா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,