கவுனி அரிசியின் பயன்கள்.

 கவுனி அரிசியின் பயன்கள்.


அரிசிகளின் மன்னன் கருப்பு கவுனி. இந்த அரிசியானது, அரிசி வகைகளிலேயே மிகச்சிறந்ததாக இருக்கிறது. நார்ச்சத்துக்களின் மூலாதாரமாக விளங்குகிறது கருப்பு கவுனி அரிசி, தாவர அடிப்படையிலான புரதத்தினையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் கருப்பு கவுனி அரிசியில் லைசின் (Lysine), டிரிப்டோபான் (Tryptophan) போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன; வைட்டமின் பி 1, வைட்டமின் பி 2, ஃபோலிக் அமிலம் போன்ற வைட்டமின்கள்; இரும்பு, துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் செலினியம் உள்ளிட்ட தாதுக்களின் சத்துகள் நிறைந்துள்ளது. இதில், அனைத்து அரிசி வகைகளையும் விட, அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள், புரதம் மற்றும் உணவு நார்ச்சத்து உள்ளது.50 கிராம் அளவிலான கருப்பு கவுனி அரிசியில், ஆற்றல் 16 கலோரிகள், புரோட்டீன் 5 கிராம் நார்ச்சத்து 2 கிராம், இரும்புச்சத்து 1 மிலிகிராம் உள்ளது. கருப்பு கவுனியின் பயன்கள்:


உணவுக் குழாய் புற்று நோயிலிருந்து பாதுகக்கிறது.


உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் நிறைந்துள்ளது.


நாட்பட்ட நோய்களாகிய சர்க்கரை, புற்றுநோய், இதயக் கோளாறு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது..


தேவையற்ற கொழுப்புக் களை கட்டுப்படுத்துகிறது. அதிகமாக நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்தது.


உயிர்ச்சத்து (Vitamin) பீ/ ஈ நிறைந்தது.


இதில் இனிப்பு பொங்கல் , பாயசம் , சாதம் ,கஞ்சி இட்லி மற்றும் தோசை ஆகியவை செய்து சாப்பிடலாம்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,