முகத்தை விட கையும், காலும் கருப்பா இருக்கா

 

முகத்தை விட கையும், காலும் கருப்பா இருக்கா
















கை, கால் முகத்தை விட கருமையாக இருக்க என்ன செய்யலாம். முகம் போன்றே கைகளும், கால்களும் கூட சூரியனின் நேரடி புற ஊதாக் கதிர்களை பாதிக்கின்றன. இது நேரடியாக வெளிப்படும் போது மெலனின் உற்பத்தியில் அதிகரிப்பு இருக்கும். இது இருண்ட நிறத்தை உண்டாக்கும். முகத்தை காட்டிலும் கைகளும் கால்களும் கருப்பாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

சூரிய ஒளி தவிர, உங்கள் கைகளையும் கால்களையும் கருப்பாக்கும் காரணங்கள் பல உள்ளது. சரும சுத்திகரிப்பு, தோல் மீது தூசி படிவது, மாசு மற்றும் அழுக்கு படிவது போன்றவை ஆகும்.

சருமம் போன்றவற்றை சுத்தம் செய்யும் போது கைகள் மற்றும் கால்களையும் சுத்தமாக்கும் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். இது ஆரோக்கியத்தையும் அளிக்கும். அழகையும் கொடுக்கும்.

கால் பராமரிப்பு பாதப்பராமரிப்பு என்பது சுகாதாரம் குறித்த விஷயங்களில் முக்கியமானது. சிலர் குளிக்கும் போது குனிந்து பாதங்களை சுத்தம் செய்வதில்லை. அதனால் அழுக்குகளும் பொலிவும் குறைந்து விடுகிறது. அதனால் அந்த இடத்தில் இதற்கு விலை உயர்ந்த சிகிச்சை தேவையில்லை.


ஆனால் வழக்கமாக அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் பாதங்கள் அழகாக மாறலாம் பாதங்களில் பித்த வெடிப்புகள், இறந்த செல்கள் தங்கியிராமல் பார்த்துகொள்ளலாம். பிறகு கால்கள் அழகாக பொலிவாக இருக்கும். இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான்.


அசிட்டோன் அல்லாத நெயில் பாலிஷ் ரிமூவரை மட்டும் பயன்படுத்துங்கள்.

வெட்டுக்காயங்களை மென்மையாக மசாஜ் செய்து தடம் இல்லாமல் குணப்படுத்தவும்.

கால்களில் சருமத்தின் ஈரப்பத நிலையை தக்க வைத்து கொள்ளும் வகையில் மாய்சுரைசர் பயன்படுத்துங்கள். மாய்சுரைசருக்கு ஷியா, கொகோ பட்டரை தேர்வு செய்யுங்கள்.

நகங்களை அதிக அழுத்தத்தோடு தேய்க்காமல் ஒரே திசையில் வெட்டிவிடுங்கள்.

வாரம் ஒருமுறை பாதங்களில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற ஸ்க்ரப் செய்யுங்கள்.

பாதங்களை ஸ்க்ரப் செய்வதற்கு ப்யூமிஸ் கற்களை பயன்படுத்துங்கள். ஸ்க்ரப் செய்வதன் மூலம் பாதங்கள் அழகாகவும் மென்மையாகவும் இருக்கும்.

தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு சுத்தமான தேங்காயெண்ணெயை பாதத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

ஓய்வு கிடைக்கும் போது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து கல் உப்பு சேர்த்து பாதங்களை நனைத்து எடுங்கள்.

நீரிழிவு கொண்டிருப்பவர்கள் பாதத்தை பராமரிக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.


கைகள் உண்மையில் தூய்மையை வெளிப்படுத்தும் ஒரு உறுப்பு ஆகும். கடுமையான குளிர், அதிக வெப்பம், மோசமான பராமரிப்பு, அழகு சாதன பொருள்களின் பயன்பாடு உங்கள் கைகளின் தோலை சேதப்படுத்தும்.


உள்ளங்கை தோல் உரிதல், உள்ளங்கை கடினமாக இருப்பது போன்றவை எல்லாமே சரியான பராமரிப்பின்மையால் வருவதே. அதிலும் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் உள்ளங்கைகள் அதிக பாதிப்பை உண்டாக்கும். எப்படி பராமரிப்பது என்ன செய்வது என்று பார்க்கலாம்.

கைகளில் காயங்கள், நகங்கள் உடைதலுக்கு தாவர எண்ணெய்களை கொண்ட க்ரீம் தடவி எடுக்கவும். கைகளில் சுருக்கங்களை தவிர்க்க நாள் முழுவதும் கைகளை ஈரப்பதமாக வைத்திருப்பது நல்லது.

கைகளில் மாய்சுரைசர் செய்வதற்கு கோகோ பட்டர், ஷியா பட்டர் பயன்படுத்தலாம்.

இது ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தவை வைட்டமின்கள் நிரம்பியவை. இது சருமத்தின் மேல் அடுக்கில் ஒரு பாதுகாப்பு சுற்றை உண்டாக்குகிறது. இதனால் சருமம் மென்மையாகவும், நீரேற்றமாகவும் உள்ளது. குளியலுக்கு பிறகு இந்த கோகொபட்டர் பயன்படுத்தலாம்.


கைகளில் இருக்கும் இறந்த சருமத்தை அகற்ற வாரம் ஒரு முறை கைகளுக்கு ஸ்க்ரப் செய்ய வேண்டும். சூரியனின் ஒளி கைகளில் படாமல் இருக்க சன்ஸ்க்ரீன் பயன்படுத்தவும்.

அதிக நேரம் சமையலறையில் பணி செய்யும் பெண்கள் கையுறைகளை அணியலாம். கைகளை கழுவும் போதெல்லாம் க்ரீம் தடவி வைக்கவும்.

ரெட்டினோல் கொண்ட மாய்சுரைசரை இரவு நேரத்தில் பயன்படுத்துங்கள். கைகள் அடிக்கடி வறண்டு போவதை கொண்டிருப்பவர்கள் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் நிறைந்த க்ரீம் வகைகளை பயன்படுத்தலாம்.

இவை எல்லாமே பொதுவான குறிப்புகள். இதை தொடர்ந்து செய்து வந்தாலே கைகளும் கால்களும் வாளிப்பாக அழகாக இருக்கும்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி