ட்ரோன்கள் மூலம்.. . சென்னை மாநகராட்சி சூப்பர் முயற்சி..

 ட்ரோன்கள் மூலம்.. . சென்னை மாநகராட்சி சூப்பர் முயற்சி.. பாராட்டும் மக்கள்

கொசு இல்லாத சென்னை



















சென்னையில் நீர் வழித்தடங்களில் உள்ள கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை அழிக்க சோதனை முறையில் ட்ரோன் இயந்திரங்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


சென்னையில் எவ்வளவு பெரிய அழகிய கட்டிடங்கள் வந்தாலும் பக்கத்திலேயே ஓடும் கூவமும், அடையாறும் அதன் அழகை அப்படியே கெடுத்துவிடும்.

காரணம் சாக்கடைகள் சங்கமிக்கும் இடமாக இந்த இரண்டு நதிகளும் உள்ளன. மலைக்காலங்களில் வெள்ள நீர் வடிகால்களாகவும், சாக்கடைகள் எடுத்து சென்று கடலில் கலந்துவிடும் இடமாகவும் இந்த கால்வாய்கள் மாறி உள்ளன

பக்கிம்ஹாம் கால்வாய், கூவம் நதி, அடையாறு ஆறு ஆகிய பகுதிகளில் தேங்கி நிற்கும் சாக்கடை தண்ணீரில் கொசு உற்பத்தியாகி அந்த பகுதியே நாற்றம் எடுக்கும். மக்களுக்கு நோய்களை பரப்பும் இடமாக இவை மாறி உள்ளன. இந்த நதிகளை சுத்தம் செய்ய எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. காரணம் அனைத்து சாக்கடைகளும் சங்கமிக்கும் இடமாக நதிகள் உள்ளன.


கொசு மருந்து இந்நிலையில் கொசு உற்பத்தியாவதை தடுக்க புதிய முயற்சியில் சென்னை மாநகராட்சி இறங்கி உள்ளது. எப்படி என்றால் சென்னையில் நீர் வழித்தடங்களில் உள்ள கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை அழிக்க சோதனை முறையில் ட்ரோன் இயந்திரங்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்துள்ளனர். மாநகராட்சியின் முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்

இது தொடர்பாக அதிகாரிகள் கூறும் போது , சென்னையில் உள்ள பக்கிம்ஹாம் கால்வாய் பகுதியில், டிவிசன் 5 மற்றும் 6 மற்றும் 7 ஆகிய பகுதிகளில் வழியாக நடந்த கடலில் போய் கலக்கிறது. இந்த பகுதியில் செடிகள், முட்புதர்கள் இருக்கிறது.

கொசு இல்லாத சென்னை இதனால் என்ன ஆகிறது என்றால் கழிவுநீர் செல்வது தடுக்கப்பட்டு, தேங்கி கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகிறது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் படி ட்ரோன்களை கொண்டு கொசு மருந்தை, இந்த கால்வாய் முழுவதும் அடிக்கப்படுகிறது. கொசு இல்லாத மாநகராட்சியாக இருக்க இந்த முயற்சி ஏதுவாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள பதிவிற்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,