எஸ்.பி.சைலஜா

 திரைப்பட பின்னணிப் பாடகி எஸ்.பி.சைலஜா 





எஸ். பி. சைலஜா ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி, பின்னணி குரல் கொடுப்பவரும் நடனக் கலைஞரும் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் 5000க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார்.


௭ஸ். பி. சைலஜா,

சம்பமூர்த்தி, சகுந்தலம்மா இணையருக்கு மகளாக கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிகதா கலைஞர் ஆவார். இவருக்கு உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் பாடகர் 

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இவருக்கு அண்ணன் ஆவார்.


எஸ்.பி.சைலஜா சுபலேகா சுதாகரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சுதாகர் தெலுங்கு திரைப்பட நடிகரும் தமிழ் சின்னத்திரை நடிகரும் ஆவா


பொண்ணு ஊருக்கு புதுசு" என்கிற படத்தில் வரும் "சோலைக் குயிலே காலைக் கதிரே" என்ற படத்தில் இவரது குரலில், சரிதா மிதிவண்டி ஓட்டிக்கொண்டே மலை கிராமம் முழுவதும் சுற்றிவரும் போது பாடலைக் கேட்கும் நாமும் அந்த கிராமத்தை ஒரு வலம் வந்து விடுவோம். அந்த அளவிற்கு மிக இனிமையான பாடல். பாடல் வரிகளும் இந்தப் பாடலின் இனிமைக்கு வலிமை சேர்த்துள்ளன. "ரோசாப்பூ ரவிக்கைக்காரி" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "மாமன் ஒரு நாள் மல்லிகைப்பூ கொடுத்தான்" பாடலில் தனது சகோதரர் S.P.B.யைப் போல, சற்று குரலை மாற்றிப் பாடினாலும் பாடல் கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும்.

"சலங்கை ஒலி" என்ற படத்தின் மூலம் நடிப்புத் துறையிலும் கால் பதித்துள்ளார். இவரைப் போன்ற நல்ல குரல்வளம் கொண்டவர்களின் பாடல்களைக் செவிமடுக்கும்போது மனம் அமைதி பெறுகிறது.


 S.P.சைலஜா அவர்கள் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள் சில


ஆசைய காத்துல தூது விட்டு.. (ஜானி)

சின்னஞ்சிறு வயதில்.. (மீண்டும் கோகிலா)

அரிசி குத்தும்.. (மண் வாசனை)

ஏதோ.. நினைவுகள்.. (அகல் விளக்கு)

கீதம்.. சங்கீதம்.. (கொக்கரக்கோ)

காலை நேரக் காற்றே.. (பகவதிபுரம் ரயில்வே கேட்)

கண்ணுக்குள்ளே.. யாரோ.. (கை கொடுக்கும் கை)

மலர்களில் ஆடும் இளமை.. (கல்யாண ராமன்)

மாமன் மச்சான்.. (முரட்டுக் காளை)

மனதில்.. என்ன நினைவுகளோ.. (பூந்தளிர்)

ஒரு கிளி உருகுது.. (ஆனந்தக் கும்மி)

வரம் தந்த சாமிக்கு.. (சிப்பிக்குள் முத்து)

மொட்டு விட்ட முல்லைக் கோடி.. (இன்று நீ நாளை நான்)

ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. (தனிக்காட்டு ராஜா)

வான் போலே வண்ணம் கொண்டு.. (சலங்கை ஒலி

courtesy:olium oliyum hits

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,