உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அருந்த வேண்டிய பானங்கள்

 உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அருந்த வேண்டிய பானங்கள்  என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

உடல் எடையைக்  குறைக்க நினைப்பவர்கள் பலரும் தங்கள் டயட் லிட்டில் உணவு பொருட்களுக்கு அதிக கவனம் செலுத்துவார்கள். எதை சாப்பிட வேண்டும், எதனை சாப்பிடக்கூடாது என லிஸ்ட் போட்டு வைத்திருப்பார்கள். அதிக காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகள் இதில் அடங்கும்.


அதே நேரத்தில் நீங்கள் குடிக்கத் தேர்ந்தெடுக்கும் பானங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். பானங்கள் என்றால் ஆரோக்கியமான பானங்களை மட்டுமே அருந்த வேண்டும். அதேநேரத்தில் சோடா மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் சர்க்கரை நிறைந்த குப்பிகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பானங்களும் அருந்த வேண்டாம்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அருந்த வேண்டிய பானங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,


water
தண்ணீர் :


உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது நல்லது. நீரேற்றமாக இருப்பது எடை இழப்புக்கு மிகவும் முக்கியமானது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. சரியான தண்ணீர் அருந்துவது பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. குறைவாக சாப்பிடுவதை உறுதி செய்ய சாப்பிடுவதற்கு முன் ஒரு முழு கிளாஸ் தண்ணீர் அருந்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு கப் (64 அவுன்ஸ்) தண்ணீர் அருந்த வேண்டும்.

green tea
கிரீன் டீ :


கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. கிரீன் டீ-யில் பூஜ்ஜிய கலோரி உள்ளது. மேலும் இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தவும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிரீன் டீ-யில் உள்ள காஃபின் உள்ளடக்கம் கொழுப்பை எரிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இரண்டு கிளாஸ் கிரீன் டீ அருந்துவது நல்லது.
ஸ்மூத்தி :


உடலைப் புத்துணர்ச்சியாக்கும் பானங்களில் ஒன்று தான் ஸ்மூத்தி. இந்த ஸ்மூத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அவற்றில் விருப்பமான பழங்களை தனித்தனியாகவோ அல்லது அவை அனைத்தையும் சேர்த்தோ ஸ்மூத்தி செய்யலாம். ஸ்மூத்தி எடை இழப்புக்கு ஒரு சிறந்த வழி, ஆனால் அவை உணவு அல்லது சிற்றுண்டி மாற்றாகப் பயன்படுத்தப்படுவதற்கு போதுமான அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எனவே பழங்கள் மற்றும் சர்க்கரைகளை அதிகளவு சேர்க்க கூடாது என்பதில் கவனமாக இருங்கள். ஸ்மூத்தியில் ஏராளமான புரதங்கள், ஃபைபர், நிறைவுறா கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.


மூலிகை தேநீர் :


மூலிகை தேநீர் எண்ணற்ற மூலிகையின் கலவையாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. மூலிகை தேநீரில் காஃபின் அல்லாததாக இருப்பதால் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. நீங்கள் தேர்வு செய்யும் மசாலா வகையைப் பொறுத்து, அது வெவ்வேறு நன்மைகளைத் தரும். உதாரணமாக, லாவெண்டர் மற்றும் கெமோமில் டீக்கள் சிறந்தவை , அதேபோல மிளகுக்கீரை தேநீர் செரிமானத்திற்கு உதவும்.

Juice
கிரீன் ஜூஸ் :


கிரீன் ஜூஸ் பல்வேறு பச்சை காய்கறிகள், பழங்களில் இருந்து தயார் செய்யப்படும் ஆரோக்கிய பானமாகும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. ஆனால் காய்கறிகளை முழுவதுமாக சாப்பிடுவது போன்ற நார்ச்சத்து இதில் கிடைக்காது. எனவே நீங்கள் உட்கொள்ளும் பழச்சாறுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு கிரீன் ஜூஸ் ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் நீரேற்றமான பானமாக இருக்கும். மேலும் நீங்கள் கிரீன் ஜூஸ் தயார் செய்யும் போது அதிகளவு காய்கறிகள் சேர்ப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


ஆப்பிள் சைடர் வினிகர் பானங்கள் :


ஆப்பிள் சைடர் வினிகர் என்பது ஆப்பிள், சர்க்கரை, பீஸ்ட் இவற்றினை சேர்த்து உருவாக்கப்படுவது. சாலட், சட்னி இவற்றில் இதனைச் சேர்ப்பர். ஆப்பிளை பிழிந்து அதன் சாற்றில் சில பொருட்களைச் சேர்த்து இதனை உருவாக்குவர். வினிகர் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க வல்லது. ஆப்பிள் சைடர் வினிகரில் தண்ணீர் சேர்த்து அருந்துவது நல்லது. நீங்கள் தேர்வுசெய்த ஆப்பிள் சைடர் வினிகரில் சர்க்கரை அல்லது செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


நட்ஸ் மில்க் :


நட்ஸ் மில்க் மிகவும் குறைந்த கலோரி மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நட்ஸ்களை பொறுத்து இரும்புச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக இருக்கும். இதில் வைட்டமின் ஈ, மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. மேலும் இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்களும் உள்ளது. பாதம், வால்நட், முந்திரி போன்ற நட்ஸ்களுடன் பால் கலந்து தயார் செய்யலாம். இனிப்பை விரும்புபவர்கள் பேரீச்சையை சேர்த்து கொள்ளலாம்.

coconut
தேங்காய் தண்ணீர் :


தேங்காய் தண்ணீ அருந்துவது அனைவருக்கும் நல்லது. தேங்காய் நீரில் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்திருக்கின்றன, இது உடலை எடையை கட்டுக்குள் வைத்திருக்க சிறந்தது. மேலும் இதில் வைட்டமின் சி, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சருமத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது. அதேநேரத்தில் உடல் எடையை குறைபவர்கள் தங்களது ஊட்டச்சத்து இழப்பை ஈடுசெய்ய தேங்காய் தண்ணீர் அருந்தி வரலாம்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,