வாலிபக் கவிஞர் வாலி

 வாலிபக் கவிஞர் வாலி மறைந்த தினமின்று



:

😤
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாலியின் இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன். தமிழ் மீது தீராத பற்று கொண்டிருந்த இவருக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. டைம்பாஸ் நிறுவன இதழில் ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்த மாலியைப் போல் சிறந்த ஓவியராக வேண்டும் என்பதற்காக இவருடைய பள்ளித் தோழர் பாபு, இவருக்கு வாலி என்று பெயர் சூட்டினார். அன்றிலிருந்து வாலி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இவர் எழுதிய பாடல்களில் சரித்திரத்தில் மறையாத பாடல்கள் ஆயிரம் உண்டு. புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கைகளில்,, கண் போன போக்கிலே கால் போகலாமா, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன், தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் , இறைவா உன் மாளிகையில், நான் மலரோடு தனியாக ஏன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள், அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததே நண்பனே, கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. இது போன்ற பாடல்கள் ஏராளம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,