நாட்டு சர்க்கரையின் ஆறு நன்மைகள்.

 


BROWN SUGAR: உடல் எடை குறைப்பு முதல் ஆஸ்துமா கட்டுப்பாடு  வரை...நாட்டு சர்க்கரையின் ஆறு நன்மைகள்.


பொதுவாக பிரவுன் ரைஸ், பிரவுன் ரொட்டி, பிரவுன் சுகர் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுவார்கள். இங்கு நாம் தெரிந்து கொள்ளப்போவது பிரவுன் சுகரின் நன்மைகளை பற்றி தான். சரி, பிரவுன் சுகர் என்றால் என்ன? என பலருக்கும் கேள்வியாக இருக்கும். அதுவேறொன்றுமில்லை நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் நாட்டு சர்க்கரையே.


வெள்ளைச் சர்க்கரை சாப்பிடும்போது தேவைக்கு அதிகமான கலோரி உடலுக்கு கிடைக்கிறது. இதனால் தேவையற்ற உடல் உபாதைகளுக்கு உள்ளாகவேண்டியிருப்பதால் வெள்ளைச் சர்க்கரையை முழுவதுமாக தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக நாட்டுச் சர்க்கரையை சாப்பிடலாம்.இது இனிப்பு சுவைக்கு தீனியாக இருப்பது மட்டுமில்லாமல் கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி6 ஆகிய சத்துக்களின் புகழிடமாகவும் உள்ளது. வெள்ளத்தில் இருந்து தயாரிக்கப்படும் இந்த சர்க்கரையால் உடல் எடை குறைப்பது முதல் ஆஸ்துமாவை கட்டுபடுத்துவது வரை எப்படி பயன்படுகிறது என்பதை பார்க்கலாம்.செரிமானம்:


செரிமானப் பிரச்சனைக்கு உடனடி தீர்வை பிரவுன் சுகர் மூலம் பெற முடியும். உதாரணமாக, நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்கள் என்றால் வெதுவெதுப்பான நீரில் இஞ்சி மற்றும் ஒரு டீ ஸ்பூன் பிரவுன் சர்க்கரையை கலந்து குடிக்கலாம். இது உடனடியாக மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது. மேலும், மலச்சிக்கலால் வயிற்றில் தேங்கியிருக்கும் தேவையற்ற காற்றை வெளியேற்றவும் உதவியாக இருக்கும்.


தசை பிடிப்புகள்:


தசை பிடிப்புகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எந்த நேரத்தில் தசைப் பிடிப்புகள் ஏற்படும் என்று யாராலும் யூகிக்க முடியாது. ஒரு சில நேரங்களில் ஏற்படும் கடுமையான தசைப் பிடிப்புகளால் வலியை அதிகமாக இருக்கும். இதில் இருந்து விடுபட வேண்டும் என விரும்பினால், பிரவுன் சுகரை எடுத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் பொட்டாசியம் கால் மற்றும் கைகளில் உள்ள தசைகளில் ஏற்படும் பிடிப்புகளை சரி செய்யும்.


உடல் எடை குறைப்பு:


உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் என்றால் இனிப்புக்கு கட்டாயம் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அறவே வெள்ளைச் சர்க்கரை உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனாலும் உங்களுக்கு ஒரு வழி உண்டு. பிரவுன் சர்க்கரையை சாப்பிடலாம். இதில், கலோரியின் அளவு மிக குறைவாக இருப்பதுடன், உங்களின் வளர்ச்சிதை மாற்றங்களுக்கும் உதவியாக இருக்கும். குறிப்பாக எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு பிரவுன் சுகர் கூடுதல் பலன்களைக் கொடுக்கும்.


தோல் பாதுகாப்பு:


வைட்டமின் பி -6, நியாசின், பாந்தோத்தேனிக் அமிலம் மற்றும் பிற தாதுக்கள் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் பிரவுன் சர்க்கரையில் காணப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துகள் தோல்கள் பளபளப்பாகவும், ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி செய்கின்றன. பிரவுன் சுகரைக் கொண்டு தோல்களில் இருக்கும் இறந்த செல்கள் நீக்க முடியும். தோல்களில் துளைகளின் அடைப்பு நீங்குவதற்கும் உதவுகிறது.


ஆஸ்துமா கட்டுப்பாடு:


பிரவுன் சுகரில் ஆன்டி அலர்ஜிக் கூறுகள் அதிகளவில் இருப்பதால் ஆஸ்துமா நோயாளிகளின் சிகிச்சைக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் ஆஸ்துமா தீவிரத்தில் இருந்து குறைந்து, இயல்பான சுவாச நிலையை அடைவதற்கு பயன்படுகிறது.பாக்டீரியா எதிர்ப்பு:


பிரவுன் சுகரின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. இதனால், உடலில் இருக்கும் பாக்டீரியா தொற்றுகள், அழற்சி பண்புகளுக்கு எதிராக போராட உதவுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு தேவையான கூறுகள் இதில் இருந்து கிடைப்பதால், இயல்பாகவே சரியாகக்கூடிய பாக்டீரியா தொற்றுகளில் இருந்து விமோசனம் பெறலாம்.


இத்தகைய நன்மைகள் கொண்ட பிரவுன் சுகரை, இனிப்பு விரும்பிகள், உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இனிமேலாவது உபயோகப்படுத்துவது நல்லது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,