லாக்டவுன்ல வீட்டுக்குள்ளேயே இருந்து எடை ரொம்ப கூடிடுச்சா

 

லாக்டவுன்ல வீட்டுக்குள்ளேயே இருந்து எடை ரொம்ப கூடிடுச்சா


கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொது ஊரடங்கு செயல்பாட்டில் இருந்தது. இந்த காலக்கட்டத்தில் பலர் வீட்டிலேயே அமர்ந்து செய்ய கூடிய வேலைகளை செய்து வந்தனர். இதனால் பலர் உடற்பயிற்சி கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட காலமானது மக்களுக்கு மிகவும் கடினமான காலமாக இருந்தது.

இதனால் பலருக்கு பொது முடக்க காலத்தில் எடை அதிகரிப்பு ஏற்பட்டது. இந்த எடை அதிகரிப்பின் விகிதமானது பொது முடக்க காலத்தில் அதிகமாக இருந்தது. வீடுகளில் நீண்ட நேரம் வேலை பார்ப்பது ஒரு அமைதியான வாழ்க்கை முறைக்கு வழி வகுத்தது. ஏனெனில் மக்கள் எந்த இயக்கமும் இல்லாமல் மணி கணக்கில் ஒரே இடத்தில் இருக்க வேண்டி இருந்தது.

குறைந்த தூக்கம், மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் அதிகப்படியான உணவு ஆகியவையும் எடை அதிகரிப்பதற்கு காரணமாகின்றன. உடற்பயிற்சி மையங்கள் மூடப்பட்டுவிட்டன என்பதால் பலர் உடற்பயிற்சிகளும் செய்வதில்லை. பலருக்கு தனிமைப்படுத்தப்படுவது மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பலர் தங்களது உடற்பயிற்சியை சரியாக செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட பொது முடக்கத்தில் ஏன் எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலே கூறப்பட்ட உட்கார்ந்த வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் மனநிலை ஆகியவை இதற்கான பொதுவான காரணமாக இருக்கலாம்.நமக்கு தினசரி தேவைப்படும் கலோரிகளின் அளவை விடவும் அதிகப்படியான கலோரிகளை எடுத்துக்கொள்ளும்போது நமக்கு உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. இந்த பொது முடக்கம் காலங்களில் நாம் கலோரி உட்கொள்ளும் அளவானது சாதரண நாட்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. இவ்வளவு நீண்ட காலத்திற்கு பெரிய உடல் உழைப்பு எதுவும் இல்லாமல் நாம் அதிகமான உணவை எடுத்துக்கொள்கிறோம்.

காலை தேநீர் முதல் மாலை சிற்றுண்டி, இரவு நேர சிற்றுண்டி அல்லது இனிப்பு வகைகள் வரை அனைத்தையும் தினசரி உணவாக எடுத்துக் கொள்கிறோம். இப்போது நாம் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம். நம்மை நாமே கவனித்துக்கொள்வது நமது சொந்த கடமையாகும். முழு உலகமும் இயல்பு நிலைக்கு வரும்போது நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.


மன அழுத்தம் உடல் எடை அதிகரிப்பிற்க்கு முக்கியமான காரணமாக உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. மன அழுத்தத்தில் இருக்கும் பலர் அதிகமாக சாப்பிடும்போது மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். ஆனால் இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்துகிறது. சவாலான சூழ்நிலைகள் வாழ்வில் ஏற்படும்போது உங்களை நீங்களே ஊக்கப்படுத்தி கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை சரி செய்ய நீங்கள் யோகா அல்லது தியானத்தை தேர்வு செய்யலாம்.

மேலும் அமைதியாக இருக்க உதவும் சில சுவாச பயிற்சிகளை நீங்கள் முயற்சி செய்யலாம். அல்லது நீங்கள் விரும்பிய விஷயங்களை செய்யலாம். உதாரணமாக இசையை கேட்டல், நடனமாடுதல், போன்ற விஷயங்களை செய்யலாம்.நீங்கள் எதை சாப்பிட்டாலும் அதில் எவ்வளவு எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள் போன்ற விஷயங்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அப்போது எந்த வகையான உணவுப்பழக்கத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உங்களால் புரிந்துக்கொள்ள முடியும். அப்போது நீங்கள் உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணமான உணவை தவிர்க்கலாம். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு உண்பதற்கு நல்ல வகையான உணவுகளை திட்டமிடுங்கள்.உங்களுக்கு நள்ளிரவில் உணவு உண்ண வேண்டும் என தோன்றினால் தயிர் போன்ற ஆரோக்கிய உணவுகளின் மீது ஈடுபாடு காட்டுங்கள், நிறைய தண்ணீர் குடிக்க முயற்சிக்கவும். காரமான உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். உணவை உண்பதற்கு சரியான நேரத்தை அமைக்கவும்.

இரவு உணவுகளை தாமதமாக சாப்பிட வேண்டாம். பின்னர் சரியான நேரத்தில் தூங்குவதும் அவசியமாகும். நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக்கொள்வது இதயத்திற்கும் உடலுக்கும் நன்மை பயக்கும்.


நீங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்கிறீர்கள் எனில் உடற்பயிற்சி செய்வது என்பது உங்களுக்கு இயலாத காரியமாக இருக்கும். அதிகப்பட்சம் தொலைப்பேசியிலேயே உங்களது வேலை முடிந்துவிடும். அவ்வாறு இருப்பவர்கள் உங்கள் வீட்டை சுற்றி நடக்க முயற்சி செய்யலாம். அது உங்களுக்கு நன்மை பயக்கும்


ஒவ்வொரு நாளும் உங்கள் உடற்பயிற்சியில் ஒரு இலக்கை அமைத்துக்கொள்ளவும். அந்த இலக்கை நீங்கள் அடைகிறீர்களா என்பதை பார்க்கவும். வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது என்பது தற்சமயம் காலத்தின் தேவையாக உள்ளது. எனவே வீட்டிலேயே எளிமையாக செய்ய கூடிய எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும்.

மிதமான உணவுகளை உண்ணவும். அதிக கலோரி கொண்ட வறுத்த உணவுகள் மற்றும் இனிப்புகள் உண்பதை குறைக்கவும். உங்கள் சமையலறையே உங்களுக்கான எடை இழப்பு மையமாகும். உணவில் நீங்கள் காட்டும் முக்கியத்துவம் பொறுத்து உங்களது எடையை குறைக்க முடியும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,