அவல் தரும் நன்மைகள்

 அவல் தரும் நன்மைகள் 

அவல் நமது பாரம்பர்ய உணவு வகைகளில் ஒன்று. தொன்றுதொட்டு அவல் காலை உணவாக நம் முன்னோர்களால் சாப்பிடப்பட்டு வந்த ஒன்று நாகரீக உலகின் மாற்றத்தால் சற்று குறைந்து வருகிறது. அவல் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள். இதில் வெள்ளை மற்றும் சிவப்பு  நிறத்தில் அவல் பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது. இதன் நிறம் அரிசியின் நிறத்தைச் சார்ந்தது.


அவல் அரிசி, கம்பு போன்றவற்றில் இருந்து தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.


வளரும் குழந்தைகளுக்கு இது மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருள்.


காலை நேரத்திற்க்கு ஒரு மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாக அவல் உள்ளது.


அவலைப் பால் அல்லது தண்ணீரில் கலந்து நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிடலாம்.


♦வெள்ளை அவல் :


வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.


♦சிவப்பு அவல் :


சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது பட்டை தீட்டப்படாத சிவப்பு அரிசியில் இருந்து தயாரிக்கப்படுவதால் மிகவும் சத்து நிறைந்ததாக உள்ளது.


♦அவலின் சிறப்பம்சங்கள் :


எளிதில் செரிமானமாகும்.


உடலின் சூட்டைத் தணிக்கும்.


செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும்.


உடல் எடையைக் குறைக்க உதவும்.


இதயத்தை ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவும்.


உடலை உறுதியாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.


மூளைச் செல்களை புத்துணர்ச்சியாக்கும்.


இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.


வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.


புற்றுநோய் உண்டாக்கும் செல்களை குடலுக்குள் செல்ல விடாமல் தடுக்கும்.


சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவுப்பொருள்.


சீதபேதி போன்ற நோய்கலை நம்மை விட்டுத் துரத்தும்.


புளியுடன் சேர்த்து உண்ணும்போது பித்தத்தை நம்மை விட்டுத் துரத்தும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,