நம்வீட்டைசுற்றி கட்டாயம் இருக்கவேண்டிய மரங்கள்.

 நம்வீட்டைசுற்றி கட்டாயம் இருக்கவேண்டிய மரங்கள்..!!! 

இந்த 10 மரங்களை வீட்டைச் சுற்றியும் வையுங்கள் உங்களை எந்த நோயும் தீண்டாது. ஒவ்வொரு விதமான மரங்களும் நமக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல நன்மைகளை தருகிறது அந்த வகையில் இந்த 10 மரங்களை வீட்டை சுற்றியும் வையுங்கள் உங்களுக்கு எந்தவிதமான நோயும் வராது. நீங்கள் ஒரு நாள் கூட பசியோடு உறங்க மாட்டீர்கள்


# வேப்பமரம் : 


வீட்டின் முன்பு அவசியம் ஒரு வேப்ப மரம் இருக்க வேண்டும் இது நமக்கு குளிர்ச்சியை தருவதோடு அதிக ஆக்சிஜனையும் நம்ம உடலுக்கு தருகிறது.மேலும் பல பிணிகளுக்கு அரு மருந்தாக பயன்படுகிறது.


# முருங்கை_மரம் :


 வேப்பமரத்தின் பக்கத்தில் ஒரு முருங்கை மரம் வைக்க வேண்டும் இதன் இலை, பூ, கனி அனைத்தும் உணவுக்கு பயன்படும் எல்லாவிதமான காலகட்டத்திலும் கிடைப்பதால் உணவுக்கு பஞ்சம் இருக்காது.


# வாழை_மரம் :


 குளிக்கும் இடத்தில் வாழை மரம் வைக்க வேண்டும். குளிக்கும் தண்ணீரால் அந்த இடத்தில் மண்ணின் தன்மை கெடும்.மண்ணின் தன்மை கெடாமல் இருக்க வாழைமரம் தண்ணீர் சுத்திகரிப்பு செய்வதோடு அதன் இலைகள் மற்றும் பழங்கள் நமக்கு பல நன்மைகளை அளிக்கின்றன.


# தென்னை_மரம் :


 பாத்திரம் கழுவும் தண்ணீர் போகும் இடத்தில் தென்னை மரம் வைக்க வேண்டும்.பிள்ளை பெற்றவுடன் தென்னம்பிள்ளை வையுங்கள் 18 வருடங்களில் உங்களுக்கு சோறு போடும் என்று பெரியவர்கள் கூறுவார்.இதன் வேரிலிருந்து நுனிவரை அனைத்தும் மனிதர்களுக்கு பயன்படுகிறது.


# எலுமிச்சை_மரம் :


 வீட்டில் எலுமிச்சை மரம் வைப்பதால் எந்த தீய சக்தியும் அண்டாது மற்றும் எலுமிச்சை கனிகள் உணவுக்கும்

தெய்வீகதீர்க்கும் பெரிதும் பயன்படுகிறது. இதுவும் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது.


# கருவேப்பிலை_மரம் :


 எலுமிச்சை. மரத்தினடியில் ஒரு கருவேப்பிலை மரம் வையுங்கள். இந்த கருவேப்பிலை கண்கள் மற்றும் முடி வளர்ச்சிக்கு மருந்தாக பயன்படுகிறது.


# நெல்லி_மரம் :


 ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் நெல்லிமரம் இருக்கவேண்டும். இந்த நெல்லிக்காயில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். இதனால் எந்த நோயும் உங்களை அண்டாது.


 #சீதா_மரம் : 


வீட்டைச் சுற்றிலும் சீதா மரம் ஒன்று அல்லது 2 சீதா மரங்கள் ஆவது இருக்க வேண்டும். ஏனெனில் இது வாஸ்து செடியாகவும் மற்றும் இதன் பழங்கள் சத்து அதிகம் நிறைந்துள்ளது.


# பப்பாளி_மரம் : 


வீட்டில் அவசியம் ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும் ஏனெனில் இதன் கனி மட்டுமல்லாமல் இதன் இலையின் சாறு மிகவும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.எனவே பப்பாளி மரம் வீட்டில் கட்டாயமாக இருக்கவேண்டும்.


# மாமரம் : 


வீட்டில் ஒரு மாமரம் வைத்தால் காசு பிரச்சினைகள் இருக்காது.மற்றும் இதன் கனிகள் பல சத்துக்களை உள்ளடக்கியது.இதன் இலைகள் தெய்வீகத்தன்மை வாய்ந்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,