சளித் தொல்லைக்கு முருங்கை இலை சூப்.
சளித் தொல்லைக்கு முருங்கை இலை சூப்.
முருங்கை என்றதும் எல்லோருக்கும் முதலில் அது தான் ஞாபகம் வரும் இதைவிட இந்த கொரோனா காலத்தில் கூட முருங்கை இலையை பயன்படுத்துவதன் மூலம் சளித் தொல்லையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என இயற்கை மருத்துவ குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
முருங்கை இலை சூப் குடிப்பதன் மூலமாக இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மற்றும் தூக்கமின்மைக்கு உதவுகிறது.
உடலின் கெட்ட நீரை வெளியேற்ற உதவுகிறது. இந்த முருங்கை இலை சூப் தொண்டை வலி, சளி, செரிமானமின்மை போன்ற பிரச்னைகளுக்கு நல்லது.
முருங்கை இலைகள் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த கீரையாகும். இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு உதவும்.
முருங்கை இலை சூப்புக்கு தேவையான பொருட்கள் :
முருங்கை இலை - 1 1/2 கப்
அரிசி தண்ணீர் - 2 கப்
வெங்காய்ம் - 5
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
தேங்காய் பால் - 1 கப்
சீரகம் - தேவையான அளவு
மிளகு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
அரிசி ஊற வைத்த தண்ணீரை முதலில் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வையுங்கள்.
நன்கு கொதிக்கும்போது சுத்தம் செய்த முருங்கை இலைகளை சேர்த்து கலந்துவிடவும். சிறிதி நேரம் கழித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்க்கவும். பின்னர் முருங்கை இலை வேகும் வரை கொதிக்கவிடவும்.
முருங்கைக்கீரை வெந்ததும் தேங்காய் பால் கொஞ்சம் இடித்த மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்துக்கொண்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
இவ்வளவுதான் இது சளி, தொண்டைவலி, இருமலுக்கு இதமாக இருக்கும்.
Comments