கல்வி வளர்ச்சி நாளின்று



பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
அந்தக் காலத்தில் போதிய வருமானம் இல்லாததால் பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப மிகவும் கஷ்டப்பட்டனர். பிள்ளைகளை பள்ளிக்கு வரவைக்க தான் பிறந்த எட்டயபுரத்திலேயே பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார், காமராஜர். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதற்கிணங்க, இலவச கல்வி, மதிய உணவு, சீருடை என கல்வி வளர்ச்சி ஒன்றே இந்த நாட்டின் வளர்ச்சி என கருதி செயல்பட்ட காரணத்தினால், கல்விக்கண் திறந்த கடவுளாக போற்றப்படுகிறார், பெருந்தலைவர் காமராஜர்.
இந்தியாவில் 12% பேர் மட்டுமே உயர்கல்விக்குச் செல்கிறார்கள்.ஆனால் தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 17 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது.படிக்காத மேதையான காமராஜர் கல்விச் செல்வத்தை தான் பெரிதாக நினைத்தார். தனக்கு கிடைக்காத அந்தச் செல்வம் மற்றவர்களுக்கு கிடைக்க பாடுபட்டார். மாணவர்கள், மதியம் உணவு கிடைக்கிறது என்பதற்காகவது பள்ளிக் கூடத்துக்கு வருவார்கள் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
நம் நாடு முன்னேற நாளும் உழைத்த தலைவர், நாட்டு மக்களுக்கு பணியாற்றுவதில் தொய்வு ஏற்படக் கூடாது என்று கல்யாணமே செய்துக் கொள்ளாத தலைவர். இன்றைக்கு தமிழகம் கல்வி, ஐ.டி. தொழில்நுட்பத்தில் மேம்பட்டு திகழ காமராஜர் ஏற்படுத்தி கொடுத்த அடிப்படை கல்வி என்றால் மிகை இல்லை.
தமிழக கிராமங்கள் பள்ளிக் கூடங்கள், பேருந்துகள், மின்சார விளக்குகளை பெற்றது காமராஜரின் ஆட்சியில்தான்.காமராஜர் ஆட்சியில் தொடக்கக் கல்வி எழுச்சி பெற்றது.
அப்பேர்ப்பட்டவரை நினைவு கூறும் இந்நன்நாளில் காமராஜர் புகழ் பாடுவோம்!
May be an image of 2 people, people standing and text that says "கல்வி வளர்ச்சி நாள் ano"

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,