எள்ளு மிட்டாயில் இவ்வளவு பயன்

 எள்ளு மிட்டாயில் இவ்வளவு பயன்களா!!! 


“ஏழைக்கேத்த எள்ளுருண்ட” என்பது ஒரு பொன்மொழி

நம் முன்னோர்கள் ஏன் இதை இப்படி சொன்னார்கள் என்பது இன்றும் பலருக்கு தெரியாத உண்மை தான்


ஆம் அதிக செலவு செய்துதான் தீர்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் அனைத்து நோய்களுக்கும் ஒரு எளிய செலவிலும் விரைவான நேரத்திலும் நோய்களுக்கு அரக்கனாக அமைகிறது இந்த எள்.


♦எள்ளு மிட்டாய் உருவாகும் விதம் :


எள்ளு விதைகளிலிருந்து எள்ளுமிட்டாய் உருவாக்கப்படுகிறது.


♦எள்ளுமிட்டாயின் நோக்கம் :


சாதாரணமாக குழந்தைகளுக்கு எள் என்பது ஒரு மிகச்சிறந்த மருந்துப்பொருள் ஆனால் எந்த ஒரு குழந்தையும் எள்ளினை நேரடியாக உண்பதற்கு வாய்ப்பில்லை ஆகையால் குழந்தைகளுக்கு எள்ளின் முழு ஆரோக்கியமும் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் எள் மிட்டாய் விற்பனைசெய்யப்படுகிறது.


♦எள் மிட்டாயில் உள்ள இயர்க்கை சத்துக்கள்:


காப்பர் ,கால்சியம் ,மெக்னீசியம் , பாஸ்பரஸ் ,வைட்டமின் பி ,வைட்டமின் ஈ ,இரும்புச்சத்து ,ஜீங்க் ,புரதச்சத்து


♦எள்ளுமிட்டாயின் பயன்கள் :


*எலும்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு காண்கிறது.


*மூச்சுத்திணறல் மற்றும் சுவாச கோளாறுகளை சரி செய்கிறது.


*ரத்த குழாய்களின் உள்ள கழிவுகளை நீக்கி ஆரோக்கிய


*எள் உருண்டை உன்பதன் மூலமாக தலைமுடி உதிர்தல் குறையும் மேலும் உச்சந்தலை வெப்பமடைதலை குறைக்கும்.


உடலில் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்ற உறுதுணையாக அமையும்.

போதை பழக்கம் உள்ளவர்கள் இதை தொடர்ந்து உண்பதால் போதை பழக்கத்திலிருந்து விரைவில் வெளிவரலாம்


உடலில் சூட்டுத்தன்மையால் சிலர் எப்போதும் படபடப்புடன் தோற்றம் அளிப்பார் . எள்ளுமிட்டாய் உன்பதன் மூலமாக உடல் படபடப்பு குறையும்.

எள்ளுமிட்டாய் உன்பதால் குழந்தைகளுக்கு தோலில் தொற்றுநோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.


♦எள்ளுமிட்டாயை யாராரெல்லாம் பயன்படுத்தலாம் ?


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம் .


சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நலம் அல்லது மருத்துவர் பரிந்துரைபடி பயன்படுத்தலாம்.


எந்த ஒரு பலகாரத்திலும் கொஞ்சம் எள்ளை சேர்த்து சமைக்கும் பழக்கத்தை, கொண்டிருந்தனர், நம் முன்னோர். உதாரணத்துக்கு, முறுக்கு, சீடை, ஓட்டை வடை, எள்ளு உருண்டை என, இப்படி விதவிதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம், அன்று முதல் இன்று வரை கடைப்பிடித்து வருகிறோம்.


எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இதில், 'ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3' கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின், 'ஏ, பி' போன்றவை உள்ளன. இதை சரியான அளவில் எடுத்துக் கொண்டால், பலன் முழுமையாக கிடைக்கும்.


தாய்லாந்தில் உள்ள, சியாங் மாய் யூனிவர்சிட்டி, புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில், பல தகவல்களை வெளியிட்டது. அதில், 'கருப்பு எள், புற்றுநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும்; மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும்' என குறிப்பிட்டுள்ளது.


புற்றுநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம், 'சீசமின்' என்ற மூலக்கூறு தான். இது, எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள் ஆகும். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த வேதி பொருள், எதிர்ப்பு சக்தியை துாண்டி, நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. இவை, ஆண்கள் - பெண்கள் என, இருவிதமாக அதன் பயனை பிரித்து தருகிறது.


பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். அத்துடன், ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பாதுகாப்பதாக, தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


மார்பக புற்றுநோய் மட்டுமின்றி, பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி, சுத்தமாக வைக்கிறது.


வெள்ளை எள்ளை விட, கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் அதிகம் உள்ளது. எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை தடுக்கும். மேலும், முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்னைகள் தீரும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,