கோல்ட் கேஸ்.(Cold Case)..திரை விமர்சனம்
ஓட்டி ட்டியில்
அமேசான்ல் நான் சமீபத்தில் ரசித்த படம்
கோல்ட் கேஸ்.(Cold Case)
. பிருத்விராஜ், அதிதி பாலனின் படம்
இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் தானு பாலக் (அறிமுகம்)
இயக்கத்தில் பிருத்விராஜ், அதிதி பாலன், லக்ஷ்மி பிரியா மற்றும் ஆத்மியா நடிப்பில் அமேசான் பிரைமில் கோல்ட் கேஸ் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
கோல்ட் கிரைம் த்ரில்லரில் அமானுஷ்யத்தையும் ஆவி அட்டகாசங்களையும் கலந்து சொல்லி இருக்கிறாங்க
. ஆனால் படத்தின் கிளைமேக்ஸை இயக்குனருக்கு முடிக்க தெரியல .கோட்டை விட்டுட்டார்
த்ரில்லர் படத்தில் அமானுஷ்யங்கள்
தான் படத்திற்கு சில
காட்சிகள் வேகத்
தடையாக உள்ளது என படம் பார்க்கும் போது உணர்கிறோம்
மற்றபடி ஆபாசம், கெட்டவார்த்தைகள்
இல்லாத ஒரு நல்ல ஒடிடி படைப்பு என்று சொல்லலாம்
பிருத்விராஜ் மற்றும் அதிதி பாலனின் அசத்தலான நடிப்பு படத்தை நல்லாவே கொண்டு சென்று இருக்கிறது
பல வருடங்களாக கண்டுபிடிக்கப்படாமல் விசாரணை முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை கோல்ட் கேஸ் என்பார்கள். இந்த கோல்ட் கேஸ்களை வைத்தே பல படங்கள் வந்துள்ளன.
கீப்பர் ஆஃப் லாஸ்ட் காசஸ் ட்ரையாலஜி சிறந்த உதாரணமாக சொல்லலாம்.
இந்த படத்தில் கண்டுப்பிடிக்கப்படாமல்
ஒரு வருடத்துக்கு முன்னால் நிகழ்ந்த, யாருடைய பார்வைக்கும் படாமல் போன ஒரு கொலை.
கேரி பேகில் சுற்றப்பட்ட ஒரு மண்டையோடு கிடைக்கிறது. அதன் பின்னணியை அசிஸ்டெண்ட் கமிஷனரான பிருத்விராஜ் தலைமையிலான போலீஸார் விசாரிக்க . அதேநேரம், புதிதாக வாடகை வீட்டிற்கு தனது மகளுடன் குடிவரும்; டிவி நிருபரான அதிதி பாலனுக்கு அந்த வீட்டில் அமானுஷ்யமான சில சம்பவங்கள் நடக்கின்றன
. பிருத்விராஜ் தனக்குக் கிடைக்கிற தடயங்களை வைத்து ஒருபக்கம் முன்னேற, அதிதி பாலன் தனக்குக் கிடைக்கிற க்ளூக்களை கொண்டு இன்னொருபுறம் விசாரிக்கிறார். இன்வெஸ்டிகேஷன், ஹாரர் என சம்பந்தமில்லாத இரு ட்ராக்குகளில் பயணிக்கும் கதை ஒருகட்டத்தில் ஒன்றாக இணைகிறது.
இது ஹாரர் படமா இல்லை துப்பறியும் சஸ்பென்ஸ் த்ரில்லரா என்று கேட்டால், இரண்டும்தான்.
ஒரேயொரு மண்டையோட்டை வைத்து தடவியல் நிபுணர்களின் உதவியுடன் பிருத்விராஜ் ஒவ்வொரு க்ளூவாக கண்டடைவது சிறப்பாக இருக்கு
படத்தின் மொத்த சுவாரஸியமும் இதில்தான் இருக்கிறது. மறுபுறம், அதிதி பாலனுக்கு ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்கள் முதலில் பயமுறுத்தினாலும், போகப் போக ஒரேயிடத்தில் தங்கிப்போன உணர்வையே தருவது என்பதை மறுக்க இயலாது
வீட்டில் அமானுஷ்ய சத்தத்தை கேட்டாலே நாம் பயப்படுவோம்
அதிதி பாலனின் வீடு முழுக்க தண்ணீர் பரவுகிறது, குழந்தை அழும் சத்தம் கேட்கிறது, ஃப்ரிட்ஜ் தானாக ஆடுகிறது. ஆனாலும், விடாப்பிடியாக குழந்தையுடன் அந்த வீட்டிலேயே இருக்கிறார்என்னதான் ஒரு இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட்; என்றாலும் நம்புகிற மாதிரி இல்லை.
வீட்டிற்குள் தண்ணி வந்தது எப்படி என்பதைக்கூடவா பார்க்காமல், வேலைக்காரியிடம் அலட்சியமாக, போய் தூங்கு என்பார்?
நடந்தது வெறும் கொலை அல்ல, அதையும் மீறிய விஷயங்கள் நடந்திருக்கின்றன என்பது நமக்கு படம் பார்க்க கூடுதல் சுவாரஸியத்தை தருகிறது.
கொரோனா லாக்டவுனை வைத்து கதையின் முக்கிய மர்மத்தை அறிந்து கொள்வது இயக்குனரின் சமார்த்தியம்
சில கதாபாத்திரங்கள் படத்தின் முன் பகுதியில் வருவாங்க இவங்க எதற்குனு நாம்
நினைக்க படத்தின் பின் பாதியில் அதற்கு விடை இருக்கும் ,இந்த படத்தில் அப்படி இல்லை
பிருத்விராஜ் அசிஸ்டெண்ட் கமிஷனராக இயக்குனரின் எதிர்பார்ப்பை கச்சிதமாக நிறைவேற்றி நம்மை படத்துடன் ஒன்ற செய்கிறார்
அதிதி பாலன், வழக்கறிஞராக வரும் லஷ்மி ப்ரியா, குடிகார மாமாவாக வரும் அலென்சியர் என அனைவரும் பாத்திரத்துக்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்
படத்தின் பக்க பலம் பிண்ணனி இசையும் ஒளிப்பதிவும்,தான் எடிட்டிங்கும் கதைக்கு எந்த உறுத்தலும் இல்லாமல் இருக்கு
பேயா இல்லை சயின்ஸா என்ற கேள்வியுடன் படத்தை முடித்திருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் கிளைமாக்ஸ் சப்பென முடிந்தது ஏமாற்றம் தருகிறது
எப்பவும் வில்லன் ஒருத்தன் படத்தின் கடைசி
காட்சி வரை வருவான்,இந்த படத்தில் அப்படிலாம் எதுவுமில்லை
இவ்வளவு திருப்பங்கள் கொண்ட கதையில் தேவையில்லாமல் எதற்கு அமானுஷ்யம் என்று நமக்கு தோன்றுவதுதான் படத்தின் மைனஸ். இதுதான் இந்தப் படத்தின் சிறப்பும், சறுக்கலும்.
சின்னச் சின்ன நெருடல்கள் இருந்தாலும் கோல்ட் கேஸ் சுவாரஸியமான ஹாரர் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர், கண்டிப்பாகப் பார்க்கலாம்.
--உமாதமிழ்
Comments