சென்னையின் பாரம்பரிய இடங்கள் தொடர் (2)அரண்மனைக்கார தெரு

  

சென்னையின் பாரம்பரிய இடங்கள் தொடர் (2)

இன்று 

அரண்மனைக்கார தெரு


ஆர்மேனியர்கள் 1600 களில் வனிகம் செய்ய சென்னை பட்டினத்திற்கு கூடியேறி வாழ்ந்த பகுதி தான் தற்போது ஐக்கோர்ட் எதிரே உள்ள வீதி. 

தற்போது இந்த தெரு அரண்மனைக்கார தெரு என்று அழைக்கப்படுகிறது,(சென்னையின் மிகப் பழமையான தெருவில் இதுவும் ஒன்று) ஆனால் உண்மைலேயே ஆர்மீனியர்கள் வாழ்ந்த வீதி. 

இந்த வீதியில் செயின்ட் மேரி சர்ச் ஒன்று உள்ளது. இந்த தேவாலயம் ஆர்மீனியர்கள் இந்த பகுதியில் வாழ்ந்ததற்கு ஓர் சான்று. இந்த தேவாலயத்தில் கல்லறைகள் உள்ளது அந்த கல்லறையில் அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. 


இவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்கள் இவர்கள் தான் செயின்ட் தாமஸ் மவுன்ட்டில் உள்ள படிக்கட்டுகளை கட்டியவர் ஆர்மேனியன் தான் இவர் தான் சைதாப் பேட்டையில் உள்ள பாலத்தை கட்டிக்கொடுத்தவர், அந்த காலத்தில் இந்த சைதாபேட்டை மற்றும் செயின்ட் தாமஸ் மவுன்டை  படகுகள் மூலமாகவே கடக்க முடியும் அதிலும் தண்ணீர் அதிகம் போனால் மணி கணக்கில் நாள் கணக்கில் கூட காத்திருக்ககூடும் இதனால்தான் அவர் பாலம் அமைத்துக் கொடுத்தார் பின்னால் அது விரிவு படுத்த பட்டு மறைமலை அடிகள் இந்த பகுதியில் வாழ்ந்ததால் அவரின்  பெயர் வைக்கப்பட்டது.

இந்த செயின்ட் தாமஸ் மலையின் மீது உள்ள தேவாலயத்தின் அருகில் Lambton survey stone உள்ளது. இவர் யார் என்றால் இந்தியா முழுவதையும் நில அளவை செய்து இந்தியா எவ்வளவு பெரிய நாடு என்பதை அளவை செய்தார். 

இந்த நில அளவை தொடங்கப்பட்ட இடம் தான் செயின்ட் தாமஸ் மவுன்ட் இந்த பணியின் முடிவில் தான் மவுன்ட் எவரெஸ்ட் கண்டுபிடிக்கப்பட்டது. இது கண்டுபிடிக்க படும்போது இந்த பெயர் இல்லை Lambton க்கு பிறகு survey ஆக வந்த எவரெஸ்ட்டினுடைய பெயரை தான் வைக்கப்பட்டது. 

அப்படி பார்த்தால் எங்கோ இருக்க Mount everest க்கும் செயின்ட் தாமஸ் மவுன்டிற்கும் தொடர்பு உள்ளது. இந்த நில அளவைக்கு பிறகுதான் ஒவ்வொரு ஊரும் எவ்வளவு இடைவெளியில் உள்ளது என கணக்கிடப்பட்டது. 


இந்த நில அளவை ஏன் அவர்கள் செய்தார்கள் என்றால் திப்பு உடன் சண்டை செய்ய அவர்களுடைய ராணுவத்தை அழைத்துச் செல்லும்போது எவ்வளவு நாளில் மைசூரை அடைய முடியும் என்று கணக்கிட முடியவில்லை அந்த துள்ளியமான விவரங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும் என்பதற்காக தான் ஒரு விரிவான survey யை அவர்கள் ஆரம்பித்தார்கள்.

இதைப் பற்றி கூட The great indian art என்ற புத்தகத்தில் வந்துள்ளது. 


நாளை வேறொரு பாரம்பரிய இடம்..




 by ஈஸ்வர் ஒளிப்படக் காதலன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,