சென்னையின் பாரம்பரிய இடங்கள் தொடர் (1)ஒத்தைவாடை நாடக கொட்டகை
#HappyMadrasDay இன்று சென்னை பிறந்து 382 வது பிறந்தநாள் ஆகும்
இது தொடர்பாக சென்னையின் பாரம்பரிய இடங்களை வலம் வந்து அது சம்பந்தமான செய்திகளையும் புகைப்படங்களையும் ஒரு மினி தொடராக பதிவு செய்ய வருகிறார் திரு ஈஸ்வர்
இன்று ஒத்தைவாடை நாடக கொட்டகை
சென்னையின் பாரம்பரிய இடங்கள் தொடர் (1)
வால்டாக்ஸ் ரோட்டில் ஒரு சிறிய சந்தில் யாரும் கவனிக்க படாமல் பாழடைந்து கிடக்கிறது இந்த நாடக கொட்டகை.
எம் கே தியாகராஜ பாகவதர், கே பி சுந்தராம்பாள், இவர்களுடைய கச்சேரிகளும். எம் ஜி ஆர், சிவாஜி, எம் ஆர் ராதா, கலைஞர் மற்றும் அந்த காலத்து முன்னனி கலைஞர்கள் அனைவருடைய நாடகங்கள் அரங்கேறிய மேடையை பார்த்த போது மனம் சிலிர்த்து ஒரு நிமிடம் மனம் கனத்து போனது.
இந்த நாடக கொட்டகையின் எதிரே உள்ள தெருவின் முனையில். இங்கு தான் எம்ஜிஆர் அவர்களின் வீடும் இருந்தது.
கலைஞரும் எம்ஜிஆர் அவர்களும் நண்பர்களாக நடந்த தெரு இது, கலைஞரையும் தனது பிள்ளையாக பாவித்த புரட்சித்தலைவரின் அம்மா சத்யபாமா இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து தானே சாதத்தை பிசைந்து உருட்டிக் கொடுப்பாராம்.
அந்த நாடக மேடை இன்னும் உள்ளது ஆனால் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் எவ்வளவு முயன்றும் அந்த நாடக கொட்டகையின் உள்ளே சென்று புகைப்படம் எடுக்க முடியவில்லை, ஏனெனில் இந்த கட்டிடம் உள்ள இடம் நீதிமன்றத்தில் வழக்கு நிழுவையில் உள்ளதால் புகைப்படம் எடுக்க முடியவில்லை.
இந்த அறிய தகவல் கொடுத்து என்னை இங்கு அழைத்துச் சென்று இந்த கட்டிடத்தை புகைப்படம் எடுக்க அதைப்பற்றிய தகவல்களையும் இதன் வரலாற்றையும் தெரிவித்த எனது நண்பர்கள் சிவா மற்றும் மகேஷ் அவர்களுக்கு நன்றி.
Comments