ஜெய் அனுமான் / ஆஞ்சநேயர் வரலாறு/ கவிதைத் தொடர் (4)

  ஜெய் அனுமான்    /  ஆஞ்சநேயர் வரலாறு/    கவிதைத் தொடர் (4)






அனுமனின் மனதிலே ஆனந்த வெள்ளமென

 

 அப்போதே உரைத்தான்  அடியேனுன் தஞ்சமென

 

 

 கானகப் பகுதியில் வானரங்கள் ஆரவாரமே

 

 காலச் சோதனையில் இராமனுக்கில்லை ஆனந்தமே

 

 வானரங்கள் வணங்கியது இராமனை பக்தியால்

 

   ஸ்ரீராமனிடம்  பெற்றனர்  முகமலர்ந்து ஆசியை

 

 

 ஸ்ரீ ராம லட்சுமணன் மனதிலே பெருந் துயரம்

 

 தாய் சீதையின் பிரிவினால் வாட்டிய அத்துயரம்

 

 சோக நிலையை வானரத்தலைவனிட ம்  முறையிட

 

 சுக்ரீவன் முடிவெடுத்தான் வானரங்களோடு உதவிட

 

 இராமனிடம் சீதையை சேர்ப்பது நம் கடமை

 

 இப்பணியொன்றே செய்வதில் முக்கியத்துவ முதன்மை

 

 திசைகள் நான்கிலும் தேடும் பணி ஆயத்தம்

 

 தென்திசை அனுமன் பயணிப்பதே பொருத்தம்

 

 கடல் தாண்டி சென்ற இலக்கே இலங்கை

 

 கண்கள் கண்டது  அசோகவனத்திலொரு ஒரு நங்கை

 

 எளிதான தோற்றத்தில் மெலிந்தே இருந்தார்

 

 எவரும் இல்லாததால் மாய்த்திடத் துணிந்தார்

 

 அனுமன் உணர்ந்தான் தேடி வந்த சீதையென்று

 

 அடுத்த கணமே உரைத்தான் ஜெய ஜெய ஸ்ரீ ராமென்று



தொடரும்)




கவிஞர் .முருக. சண்முகம்

சென்னை








Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்