குடலில்தங்கியிருக்கும்அழுக்குகளைநீக்கும் #பிரண்டை_

 

குடலில்தங்கியிருக்கும்அழுக்குகளைநீக்கும் #பிரண்டை_ 




பிரண்டை காரச்சத்து அதிகம் கொண்டது. பிரண்டையை சாப்பிடும்போது அதிலுள்ள காரச்சத்து ரத்தத்தில் கலந்து நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.


பிரண்டை மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம் வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த குணமுடையது.


பாக்டீரியா, வைரஸ் போன்ர கிருமிகலால் ஏற்படும் நோய்களையும், ஜீரம் போன்றவையும் ஏற்படாமல் தடுக்கும் தன்மை பிரண்டைக்கு உண்டு.


காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்து இரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும்.


மூக்கில் வடியும் ரத்தம் நிற்க இந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்று துளி மூக்கில் விடலாம், இந்தச் சாற்றையே தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வரபெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.


முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.


பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊற வைத்து வேளைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.


பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.


பிரண்டையை துவையலாகவும், சட்னியாகவும் செய்து சாப்பிட்டு வர பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.


வயிற்றில் வாயு கோளாறு ஏற்பட்டு அவதியுறுபவர்கள் வாரம் ஒருமுறை அல்லது ஒருமுறை பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை, அஜீரண கோளாறுகள் போன்றவை நீங்கும். குடலில் தங்கியிருக்கும் அழுக்குகள் மற்றும் நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துகிறது.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி