சர்வதேச_யானைகள்_தினம்/ பேருருவின் சிறு புள்ளி..

 பேருருவின் சிறு புள்ளி..




சின்ன வயசா இருக்கும் போது ஊருக்குள்ள யானையை கூட்டிட்டு வருவாங்க அந்த கழுத்து சலங்கையும், பெரிய வெண்கல மணியும், கழுத்துப்பட்டயமும், நெத்தியில் வரைஞ்சிருக்கும் அல்டா டிசைனுக்குமே பின்னாடியே போவோம் அந்த மணிசத்தம் ஏழு தெருவுக்கு முன்னாடி இருந்தே கேட்க துவங்கியிருக்கும் பெரிய வீடுகளில் பாகன் நிப்பாட்டி ஆசிர்வாதம் பண்ண சொல்லுவாரு அஞ்சு, பத்து காசெல்லாம் கொடுத்தா தூக்கி தலைக்கு மேல கரகம் சுத்தும்'னு சொல்லுவாங்க எனக்கு பயமிருக்காது தினமும் அந்த டகடக..டகடக' னு மரவண்டியில் தள்ளிட்டு வர்ற சோம்பப்டிக்கு 25 காசு நிறைய சேர்த்து வெச்சிருப்பேன் ஆக பஞ்சமில்லாமல் ஆசிர்வாதமும் வாங்குவேன்.
இது வழக்கமா நடக்கற சங்கதி எனக்கு ஏனோ இந்த ஆசிர்வாதத்துல நம்பிக்கை இல்லை வேறொன்னு உண்டு ஒருமுறை பாகன் கேட்டாப்பிடினு யானைக்கு நம்ம கெணத்துல இருந்து தண்ணி சேந்தி சேத்தி கொடுத்தோம் முக்கா கெணறு காலி ஆகிடுச்சு குடிச்சி முடிச்ச பிறகு அந்த தும்பிக்கைல ஷவர் போல விளையாடிய போதே அந்த பேருருவம் எனக்குள்ள ஆழமா இறங்க ஆரம்பிச்சது அதோட குழந்தைத்தனம் ரொம்ப பிடிச்சி போச்சி கைக்கு வாகான வடிவத்தில் யானையை ஒரு புள்ளியாக உருவகித்துக் கொண்டேன் பிறகு யானையை மறக்கவே முடியல அதன் நினைவில் இருந்து மீளவும் முடியல.
அஞ்சாது வரை நான் நெசமாவே படிச்சதில்லை விளையாடிட்டே திரிஞ்ச அற்புதமான வயசு அப்போதான் வரதராஜன் சாரு எங்கப்பாட்ட என்னைப் பத்தி நல்லவிதமா நாலே நாலு வார்த்தை சொல்லியிருக்காரு அதாவது 'உங்க புள்ள கொஸ்டினையே ஆன்சர் ஷீட்ல முழுக்க பத்து வாட்டி எழுதி வெச்சிருக்குனு அதுக்கெல்லாம் காரணம் எங்கப்பாதான்னு மாட்டி விட எனக்கு தெரியல காரணம் அறியா வயசு இவருதான் சொன்னாரு படிக்கலனா பரவால கொஸ்டினையே எழுதி வெச்சிட்டு வா கண்ணுனு
இது இப்படி இருக்க யானை ஊர்வலம் போன மதிய வேளையில் சாப்பிட்டு தூங்கிட்டு இருந்த என்னை பிரகாஷ் அவசரமா எழுப்பினான்
என்னடா.. எதுக்கு..
உஷ்..பேசாத வானு மோகன் கடையில் வாடகைக்கு எடுத்த கேரியர் வெச்ச சின்ன சைக்கிளில் என்னை உட்கார்த்தி வெச்சி மந்தைவெளிக்கு டபுள்ஸ் அடிக்கிறான்
எனக்கோ பயம் ஒருபக்கம் திடலில் கட்டிப்போட்ட யானை இருக்கு இவ்ளோதூரம் சொல்லாம கொள்ளாம தனியா கூப்பிட்டு வந்திருக்க பயம் வேற கூடவே சரியான நேரத்துக்கு சைக்கிளை கொடுக்கலன்னா எக்ஸ்ட்ரா பத்து பைசா தரணும்ற மன உளைச்சல் வேற யோசிச்சிட்டே இருக்கும் பிரகாஷ் சைக்கிளை தரையோடு தரையா போட்டு வந்து என் கைபிடிச்சி இழுத்துட்டு போனான் இவன் எதுக்கு கூட்டியாந்தான் எங்க கூட்டி போறானு தெரியாம அவன் பின்னாடியே போனேன்.
போனவன் ஒரு இடத்தில் நிறுத்தி 'ப்ரியா..இந்தா இதுல நல்லா குதி..ஜங்குஜங்கு'னு குதி'ன்னு யானை சாணி குவியலை காட்டினான்.
டேய்ய்ய்ய்...அய்ய்ய...ச்ச்ச்சீய்ய்
நா மாட்டேன்னு சொல்லவும் என் ரெட்டை ஜடையை பிடிச்சி ஒரு சுத்து சுத்தி
'யேய்..யான சாணியை மிதிச்சா படிப்பு நல்லா வரும் அந்த வரதராஜன் சாருகூட தெனமும் இங்கே வந்துதான் மிதிக்கிறாருன்னு சொன்னதுதான்
நெசமாவே சொல்றேன் தொபுகடீர்'னு குதிச்சி நல்லா மிதிச்சி அதகளம் பண்ணி சாணி தெறிச்சி என் கவுன் கொலுசெல்லாம் அப்பியிருக்க வீடு வந்து சேர்த்தான் இப்போ என் நினைவின் வழி மீண்டான்‌.
இந்த கால குழந்தைகள் உண்மையாலுமே வாழ்தலில் பாலியத்தில் வாழ்வதை இழக்கும் சூழலில்தான் இருக்காங்க சம்மணக்கால் போட்டு கோழியோடு கோழியாக விளையாடி மீண்ட வயசு இக்கால குழந்தைகளில் எல்லாருக்கும் கிடைக்கல
இயல்பான படிப்பும் அழுத்தமற்ற அந்த வயசும் கத்துக்க வெச்சது என்னையும் பிறகான நாட்களில் படிக்க வெச்சது
வெதுச்சூடு உள்ளங்காலில் பட நான் வாழ்ந்த வாழ்க்கை இப்போ அவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கு என் குழந்தை பருவம் சரியான நேர்க்கோட்டில் போனதுனு என்னால் உறுதியாக சொல்லமுடியும்
காரணம் என்னை சுற்றி நண்பர்களும் இருந்தாங்க கூட என் கைப்பிடிச்சி வாழ்ந்தாங்க இதைவிட யானைகளை நினைவு கூற வேறென்ன வேணும்.
--சங்கீதா ராமசாமி





படத்தில் தலையில் ஏழு அம்புகள் துளைத்த நிலையில் போர்க்களத்தில் சண்டையிடும் யானை
பெங்களூரு அருங்காட்சியகம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,