நீங்காத நினைவுகள் ஆனந்த கண்ணன்

 

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் நேற்று இரவு

16.8.2021 அன்று காலமானர்

அவரைப்பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொள்கிறார்

தொலைக்காட்சி நடிகை,கவிஞர், சமூக ஆர்வலர்,நிகழ்ச்சி தொகுப்பாளர் ரேகா அவர்கள்







தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் வந்த பிறகு

தொண்ணூறுகளில் தன்னை ரசிக்க வைத்து
மிக அழகான மொழியால் தன் வசப்படுத்திய மிகச் சிறந்த தொகுப்பாளர் பெப்சி உமா அவர்கள்❤️
உலகம் முழுவதும் அவருடைய திறமை அடித்துக்கொள்ள முடியாது என்று வியந்து பார்க்கும் நேரத்தில் தான்
வெளிநாட்டிலிருந்து ஆனந்த கண்ணனின் வருகை
கண்ணன் தமிழாலும் தன் கொஞ்சும் மொழியாலும் இளைஞர் முதல் முதியவர் வரை எல்லோரையும் தன்வசப்படுத்திக் கொண்டார்
தொண்ணூறுகளில் அவரை காதலிக்காத பெண்களே இல்லை
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அன்றைக்கெல்லாம் அலைபேசி இல்லாத காலம் என்பதாலேயே
ஆனந்த கண்ணனின் சத்தத்தையும் புகைப்படங்களையும் கையில் ஏந்திக்கொண்டு கல்லூரி போன நாட்கள் எல்லாம் உண்டு
அப்படி இவர்கள் இருவரை பார்த்துதான் தொகுப்பாளராக வேண்டும் என்கின்ற ஆசை எல்லாம் எனக்குள் வந்தது
பிறகு நான் சென்னை வந்தபோது அவர் சிங்கப்பூர் பயணம் பட்டிருந்தார்
2017 ஆம் ஆண்டு
ஒரு கூத்துப்பட்டறையில் இருவரும் சந்திக்க நேர்ந்தது
நான் ஒரு காலத்தில் உங்களை விரும்பி இருக்கிறேன் உங்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்து வியந்து இருக்கிறேன் என்றெல்லாம் அந்த நாட்களை அவருக்கு ஞாபகப்படுத்தி அழகான நினைவுகளை இருவரும் பகிர்ந்து கொண்டோம்
அன்று ஆனந்த கண்ணன் தொலைபேசி எண்ணை என்னிடம் கொடுத்துவிட்டு
எப்போது வேண்டுமானாலும் பேசுங்கள் என்று தன் குழந்தைகளின் புகைப்படங்களை காட்டி
அன்பான காதல் மனைவியின் புகைப்படத்தையும் காட்டி நல்ல நண்பர்களாக அறிமுகமாகிக் கொண்டோம்
பிறகு நேரில் பார்த்த பொழுது
அலைபேசி வாயிலாக பேசிய பொழுதும்
இன்றும் என் காதுகளில் மறக்காமல் ஒலிக்கும் ஒற்றைச் சத்தம்
So sweet
so sweet
இதை நான்கு வார்த்தைக்கு
ஒரு முறை பயன்படுத்திய அந்த நினைவு நீங்காமல் இருக்கிறது கண்ணா
கண்ணனை
எப்போதும் ஏக்கத்தோடு ரசித்துக் கொண்டிருக்கும் உலகம் என்பதாலே உன்னையும் இனி
அப்படியே
காலை எழுந்தவுடன் செய்தி கேட்டதில் இருந்து
மனதிற்குள் ஏதோ இனம் புரியாத ஒரு வேதனை
சிரித்து சிரித்து கொண்டாடினாய் உன் நாட்களை எல்லாம்
உன்னைச் சுற்றி எல்லோரும் புன்னகைத்தவாறே கடந்து செல்வார்கள்
கண்ணா உன் தலைப்பாகைக்கு ஒரு வரலாறு வைத்திருந்தாய்
நீ நிற்கும் ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது
இப்படி தொகுப்பாளன் நடிகர் என்பதை தாண்டி நல்ல நண்பனாக எப்போதும் மரியாதை தரும் ஒரு மனிதனாக எங்களையெல்லாம் கண்ணீர்விட வைத்திருக்கிறாய்
ஆத்மா சாந்தி அடையட்டும்
*இன்று கையில் மொபைல் கேமரா வைத்திருக்கும் ஒவ்வொருவருமே தொகுப்பாளர்கள் தான் என்று சொல்லும் அளவுக்கு பிரபலம் ஆகின்றனர்.*
*ஆனால் இதெல்லாம் தலைதூக்குவதற்கு முன்னரே தொகுப்பாளராக சிறந்து விளங்கியவர் ஆனந்த கண்ணன்.*
*சிங்கப்பூரை சேர்ந்த தமிழரான இவர் அங்குள்ள வசந்தம் என்னும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.*
*ஆனந்த கண்ணன் பிறகு குடும்பத்துடன் சென்னைக்கு ஷிப்ட் ஆனார்.*
*சிந்துபாத் என்ற பெயரில் சண்டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்த இவர் குழந்தைகளின் மனதைக் கவர்ந்தார். விக்கிரமாதித்தனர் தொடரும் இவர் நடிப்பில் ஹிட் அடித்தது. 2012ல் அதிசய உலகம் என்னும் 3D படத்திலும் நடித்தார்.*
*வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா படத்திலும் தலைகாட்டினார். இதனைத் தொடர்ந்து இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னும் படத்திலும் ஹீரோ நடித்தார்,*
*தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கே போய் விட்ட ஆனந்த கண்ணன்,*
மீண்டும் தான் முதன் முதலில் வேலை செய்த வசந்தம் டிவியிலேயே மீண்டும் சேர்ந்து தொகுப்பாளர் ஆகினார்.
உன் நீங்காத நினைவுகள்
ஆத்மா சாந்தி அடையட்டும்








Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி