தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா

 சட்டமன்ற நூற்றாண்டு விழா!


இன்று  02.08.2021 மாலை தமிழக  சட்டமன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது

. விழாவில் முக்கியப் பிரமுகராக இந்திய குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு .முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்கள் சட்டமன்றத்தில் திறந்து வைத்தார்கள் 





தமிழ்நாடு சட்டமன்றம், நாட்டிலுள்ள சட்டமன்றங்களில் முதன்மையானது 

கலைஞர் திருவுருவப்பட திறப்பு விழாவில் பங்கேற்பதில் பெருமை 

அரசியல், தமிழ்மொழி என பல்துறை வித்தகராக திகழ்ந்தவர் கலைஞர்

ஏழை, எளிய மக்களின் வாழ்வு மேம்பட பாடுபட்டவர் கலைஞர் 

சட்டமன்ற நூற்றாண்டு விழா - தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை


 தமிழக சட்டமன்றம் முதல் நாள்  ஒரு கண்ணோட்டம்.

1919 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசு சட்டம் தான் தேர்தலை பரவலாக்கியது.சட்டமன்றங்களுக்குள் அதிகமான மக்கள் பிரதிநிதிகளை அனுப்ப அனுமதித்ததும் இந்த சட்டம் தான். நியமன அதிகாரிகள் குறைந்து நியாயமான தேர்தல் மூலம் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.அதுவரை ஆளுநர்களின் நிர்வாக சபையின் நிழலாக இருந்த சட்டமன்றம் தனித்து இயங்கும் அதிகாரம் படைத்ததாக மாறியது. இதற்கு மதராஸ் லெஜிஸ்லேட் டிவ் கவுன்சில் என்று பெயர்.அதாவது எம். எல்.சி.


1920 இல் நடந்த முதல் தேர்தலின்போது சட்டசபையில் 127 உறுப்பினர்கள் இருந்தார்கள். இதில் 98 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 29 பேர்கள் ஆளுநரால் நியமிக்கப்பட்டார்கள். மக்கள் பிரதிநிதிகளா ல் நிறைந்து வழிந்த சட்டமன்றம்  1920 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் நாள் கூடியது.


 அவ்வமயம், நீதிக்கட்சி சார்பில் வெற்றிபெற்றவர்களில் முக்கியமான சட்டமன்ற உறுப்பினர்கள்  சர். பிட்டி தியாகராஜர்,பனகல் அரசர், சுப்பராயலு ரெட்டியார், டி எம் நாயர் போன்றவர்கள்.



 ஜார்ஜ் மன்னனின் சித்தப்பாவான கன்னாட்,சென்னை சட்டசபையை முதல் முதலில் தொடங்கி வைத்தவர். அவர் முதன்முதலில் பேசும்போது  "இந்தியாவின் நெருங்கிய நண்பன் என்ற முறையில் பழைய தகராறு களையும், கோபச் செயல் களையும்  சம்பவங்களையும் மன்னித்து மறந்து விடும்படி இந்தியர்களையும், ஆங்கிலேயர்களையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.



 ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களுக்கும் தனித்தனி இருக்கை ஒதுக்கி, ஒரே கட்சியைச் சேர்ந்தவர் களுக்கு சேர்ந்தாற்போல் உட்கார்ந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்கும் வசதியை செய்து கொடுத்தவர் அன்றைய ஆளுநர் வெலிங்டன்.


 அந்த வெல்லிங்டன் தனது முதல் உரையிலேயே இன்னொரு முக்கியமான கருத்தையும் சொல்லிவிட்டு போனார்." எல்லாம் வல்ல கடவுளின் விருப்பத்தோடு, பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த முதல் சட்டசபையின் செயல்பாடுகள் மதம், சாதி வேறுபாடுகளைக் கடந்து மாகாணத்தின் வளர்ச்சி,வளம் ஆகியவற்றுக்கும் மக்களின் அமைதி, மனநிறைவு, மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு மேலும் மேலும் உதவும் என்று வாக்குறுதியும் அளித்தார்.


 சபாநாயகருக்கு தன் வீட்டிலிருந்து நாற்காலியை கொடுத்த அன்று

" இந்த ஆசனத்தில் அமர போகிறவர்கள் இந்த சபையின் கௌரவத்தையும் கண்ணியத்தையும்  கட்டிக்காக்க  வேண்டும் என்று  அப்போதே தெரிவித்தார் அன்றைய ஆளுநர் வெலிங்டன்.



முருக.சண்முகம்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,