சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற ஒரு தக்காளி துண்டு
: சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற ஒரு தக்காளி துண்டு இருந்தால் போதும்!
சருமத்துளைகள் சுருங்கும் சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும். இது ஒருவரின் முகத்தை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும். இதனைத் தவிர்க்க, தினமும் தக்காளியை துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் விரிவடைந்த சருமத் துளைகள் சுருங்கும்.
சரும கருமை அகலும் வெயிலில் அதிகம் சுற்றி முகம் கருமையடைந்துள்ளதா? அப்படியெனில் தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டைக் கொண்டு முகத்தை தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்
பொலிவான முகம் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா? முகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை துண்டாக்கி தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து விடுங்கள். பின் 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். பின் பாருங்கள் முகம் பொலிவுடன் காணப்படும்.
எண்ணெய் பசை நீங்கும் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்தால், அதனைத் தவிர்க்க தக்காளியை தினமும் முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் நல்ல பலன் கிடைப்பதை நீங்களே காணலாம்.
தக்காளி ஃபேஸ் வாஷ் தினமும் மாலையில் வீட்டிற்கு வந்ததும் முகத்தைக் கழுவும் போது சோப்பைப் பயன்படுத்தாமல், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் உடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.
தக்காளி ஃபேஸ் பேக் தக்காளியைக் கொண்டு ஃபேஸ் பேக் போட நினைத்தால், தக்காளி சாற்றுடன், சிறிது தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1 முறை போட்டு வந்தால், முகத்தின் அழகு மேம்பட்டு இருப்பதை காணலாம்.
Comments