ஆண்டவனே துணையாய்” எனும் அதிரடியான பாடல்
அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் ஹிட் அடித்த விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு கொலைகாரன் திரைப்படத்திற்காக ஒரு பக்கா மாஸான அதிரடியான பாடல் ஒன்றை எழுதியுள்ளார் கவிஞர் அருண்பாரதி.
விஜய்ஆண்டனியின் அண்ணாதுரை திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இவர். தொடர்ந்து காளி, திமிருபுடிச்சவன், சண்டக்கோழி 2, களவாணி 2, தில்லுக்குதுட்டு 2, சிதம்பரம் இரயில்வேகேட் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்த நிலையில் விஸ்வாசம் திரைப்படம் இவருக்கு அழுத்தமான அடையாளத்தை பெற்றுத் தந்தது.
இந்நிலையில் விஜய்ஆண்டனி, அர்ஜூன் இருவரும் நடிக்கும் கொலைகாரன் திரைப்படத்திற்காக “ஆண்டவனே துணையாய்” எனும் அதிரடியான பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தப்பாடல் பற்றிக் கூறுகையில், இது கதைக்கு அவசியமான பாடல் என்றும் படத்தின் ஒட்டு மொத்த கதையும் இந்தப் பாடலில் அடங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் கொலைகாரன் மற்றும் கொலைகாரனை துப்பறியும் துப்பறிவாளன் என விஜய் ஆண்டனி, அர்ஜூன் இருவருமே இந்தப் பாடலுக்குள் வருவதால், இருவருக்கும் மாஸ் குறையாமல், அதே சமயம் கதைக்களத்தை தாங்கியும் இந்தப் பாடல் வரிகள் உருவாக்கப் பட்டிருப்பதாக இவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர். ஆன்ட்ரூ இசையமைப்பாளர். சைமன் ஆகியோரோடு இரவு ஒன்பது மணிக்கு அமர்ந்து இரவு இரண்டு மணிக்குள் இந்தப் பாடலை உருவாக்கினோம் என்று கூறிய அருண்பாரதி தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் இளம் பாடலாசிரியர்களில் முண்ணனியில் இருக்கிறார்.
. இவர் மேலும் தொடரந்து பல திரைப்படங்களுக்கு பாடல் எழுத பீப்பிள் டுடேயின் வாழ்த்துகள்.
Comments