மழைக் காலத்தில் சாப்பிட வேண்டிய நார்ச்சத்து நிறைந்த உணவுகள்.

 மழைக் காலத்தில் சாப்பிட வேண்டிய நார்ச்சத்து நிறைந்த உணவுகள்.
சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்துள்ள உணவுகள் மிக அவசியம். நார்ச்சத்து உணவுகள் செரிமானமாக நேரமெடுக்கும். இதனால் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்ட ஒருவர் நீண்ட நேரத்திற்கு முழுமையானதாக உணர்வார். நார்சத்து மனித செரிமான அமைப்பில் இருக்கும் நொதிகளால் எளிதில் உடைக்க முடியாத தாவர அடிப்படையிலான உணவின் ஒரு பகுதியாகும். மனித உடலால் நார்சத்து உறிஞ்சப்படும் போது, அது தேவையற்ற உணவை உங்கள் உடல் உறிஞ்சுவதைத் தடுக்கிறது.


மேலும் இதன் ஆரோக்கிய நன்மைகளை பொறுத்தவரை, இது பெருங்குடல் பகுதி மற்றும் செரிமான மண்டலத்தில் உள்ள செல்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக ஒரு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவு மலச்சிக்கல் மற்றும் மலத்தை வெளியேற்றுவதால் ஏற்படும் வலி போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கிறது.அதன் ஏராளமான செரிமான நன்மைகளைத் தவிர, ஒருவரது டயட்டில் அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் அவை எடை இழப்பு முயற்சிக்கு உதவுகிறது.


மேலும், நல்ல இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் பக்கவாத அபாயத்தை நார்சத்து உணவுகள் வெகுவாகக் குறைக்கின்றன. இரத்த சர்க்கரை அளவை இது ஒழுங்குபடுத்துகிறது. இவ்வளவு நன்மைகளை கொண்ட இந்த உணவுகளை தற்போது ஆரம்பித்துள்ள மழைக்காலத்தில் எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது. ஏனெனில், மழை காலங்களில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை. இதனை தடுக்க, ஒருவர் தங்களது தினசரி டயட்டில் இந்த முக்கியமான நார்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். அவற்றை பற்றி பின்வருமாறு காணலாம்.


வாழைப்பழம்:


வாழைப்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்க உதவும். வாழைப்பழம் பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த மூலமாகும். இந்த சுவையான வாழைப்பழத்தை அப்படியே கூட சாப்பிடலாம். அல்லது ஓட்ஸில் கலந்து சாப்பிடலாம். இல்லையெனில் வாழைப்பழ ஸ்மூதி செய்து சாப்பிடலாம்.


ஓட்ஸ்:


நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரங்களில் ஒன்றாக ஓட்ஸ் கருதப்படுகிறது. ஓட்ஸ் உப்மா முதல் ஓட்ஸ் கிரானோலா பார்கள் வரை பல்வேறு வழிகளில் ஓட்ஸினை உணவில் சேர்க்கலாம். அல்லது சாதாரணமாக ஓட்ஸ் கஞ்சி வைத்தும் குடிக்கலாம்.
பருப்பு:


பருப்பு வகைகள் புரதத்தின் வளமான மூலமாகும். ஆனால் அவற்றில் அதிக நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. பருப்பு வகைகளில் கார்போஹைட்ரேட்டுகளுடன் காணப்படும் நார்ச்சத்து உங்கள் ஆற்றல் அளவை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உங்கள் மனதையும் உடலையும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.


ஆளி விதைகள்:


ஆளி விதை பூக்கும் தாவரத்திலிருந்து கிடைக்கின்றன. இந்த சிறிய விதைகளில் நார்ச்சத்து மற்றும் புரதசத்து இரண்டும் அதிகம் நிறைந்துள்ளது. ஆளி விதைகள் பெரியவர்களிலும் நீரிழிவு நோயாளிகளிலும் குடல் இயக்கத்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. எனவே, உங்கள் வழக்கமான உணவில் ஆளிவிதை சேர்க்க ஒரு சிறந்த வழி ஆளிவிதை ரைதா ரெசிபி தான். அரைத்த ஆளி விதையை கொஞ்சம் தயிரில் கலந்து அதில் மேலும் புதினா மற்றும் உப்பு சேர்த்து சாப்பாட்டு சைடு டிஷ்-ஆக பரிமாறினால் ருசியாக இருக்கும்.


ஆப்பிள்கள் மற்றும் பேரிக்காய்:


ஆப்பிள் மற்றும் பேரிக்காய் இரண்டையும் தோலுடன் அப்படியே சாப்பிடும் போது தோலில் உள்ள நார்சத்து உடலுக்கு கிடைக்கிறது. ஏனெனில் பழத்தை விட தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால்தான் அதன் தோல் உரிக்காமல் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். எப்போதும் பழங்களை அப்படியே சாப்பிடும்போது சிறந்த பலனை தருகின்றன.


ப்ரோக்லி:


ப்ரோக்லியில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இந்த சுவை நிரம்பிய காய்கறியை சிறிது எண்ணெய், உப்பு மற்றும் பூண்டுடன் வெறுமனே வறுத்து சாப்பிடலாம். அவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளன.
நட்ஸ்:


பாதாம் முதல் அக்ரூட் பருப்புகள் மற்றும் முந்திரி பருப்புகள் வரை அனைத்து வகையான நட்ஸ்களிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. காலையில் சிறிதளவு நட்ஸ்களை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழைப்பழ வால்நட் ஸ்மூத்தி, பாலில் நட்ஸ் கலந்து சாப்பிடுவது போன்ற விதவிமான முறையிலும் நீங்கள் நட்ஸ்களை எடுத்துக் கொள்ளலாம்.


Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,