ஆடிப்பெருக்கு:

 ஆடிப்பெருக்கு:

























🌹🌿எளிமையாக வீட்டிலேயே கொண்டாடுவது எப்படி? 🌹 🌿 ஆடி மாத மழையால் ஏற்படும் புது வெள்ளத்தை வரவேற்று ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற பண்டைய தமிழரின் எண்ணத்தில் உருவானதே ஆடி பதினெட்டாம் பெருக்கு என்கிற ஆடிப்பெருக்கு. 🌹 🌿 இன்று ஆடிப்பெருக்கு: எளிமையாக வீட்டிலேயே கொண்டாடுவது எப்படி? 🌹 🌿 ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள். அதுவும் காவிரி நதி பாயும் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை என்னும் முதுமொழி இதில் இருந்துதான் தோன்றியது. 🌹 🌿 அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். மேலும் ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு நல்ல மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது என்றாலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நீராட அனுமதிக்கப்படமாட்டர்கள். அதனால் நதிக்கரை, ஆற்றங்கரைகளில் நாளை மக்கள் கூடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 🌹🌿 இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது ஆனாலும் புனித நீராடமுடியவில்லை என்ற கவலை இருக்கத்தான் செய்யும். ஆனால் மக்கள் கவலைப்பட வேண்டாம். எல்லோரும் அவர்களது வீட்டிலேயே விதம் விதமாக சமைத்து பலகாரம் செய்து, வீட்டு வாசலில் கோலம் போட்டு அலங்கரித்து காவிரியை, வைகையை, தாமிரபரணியை மனதால் வணங்கி ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளை கொண்டாடுவோம். 🌹 🌿 ஆடிப்பெருக்கு நாளில் கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி வணங்குகின்றனர்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,