அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் பிறந்தநாள்

 என்றென்றும் எல்லோர் நினைவிலும் போற்றப்படுபவர் அருட்தந்தை  வேதாத்திரி மகரிஷி அவர்கள் பிறந்தநாள் இன்று 

 (14.08.1911)        *******

 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


 நல்வார்த்தையை வாயார வாசித்த மகான்


 நாடும் வீடும் நலம் பெற ஆசியளிதித்த மகான்


 நல்லக் கருத்துக்கள்  உரைத்த மகான்


 சொல்லும் சொல்லில்  சொக்கவைத்த மகான் 


 கூடுவாஞ்சேரியில் அவதரித்த புண்ணிய மகான்


 கொண்ட கொள்கையினால் உயர்ந்த மகான்


 அமைதியுடன் அறிவாற்றலை வளர்த்த மகான்


 ஆழியாரில் அருட்தந்தையாய் உறங்கும் மகான்


 நெசவாளர் குடும்பத்தில் பிறந்த மகான் நெய்யும் இழைகளாய் போதனை  போதித்த  மகான்


 நினைவில் மெய்ஞானம் உணரவைத்த  மகான்


 நிதானமாய் யோகப் பயிற்சியளித்த மகான்


 இருகைகளை உயர்த்தி இன்பமளித்த மகான்


 எதிலும் ஆசையை தவிர்த்த மகான்


 அறமெனும் விதையை விதைத்த மகான் 


 ஆற்றலைப் பயன்படுத்தி மாற்றம் கண்ட மகான் 


 வேதாத்திரி மகரிஷியெனும் பெயருள்ள மகான்


 வெள்ளையுள்ளம் கொண்ட விந்தைமிகு மகான்


 வாழும் காலத்தில் ஏற்றமடைந்த மகான்


 வாழ்ந்த பின்னும் உலகம் போற்றும் மகான்


 வாழ்க வளமுடன் வாழ்க வையகம்


 முருக.சண்முகம்Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்