பெருங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்.

 பெருங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள். 
இந்தியச் சமையலில் ஒரு தனிப்பட்ட இடத்தை வகிக்கிறது பெருங்காயம்.சாம்பார், ரசம் போன்ற நம் தென்னிந்திய உணவுகளில் பெருங்காயம் சேர்க்காமல் சமைக்கும் பழக்கம் இல்லை.தினமும் 5முதல் 30மி.கி. பெருங்காயம் எடுத்துக் கொள்ளலாம்.பெருங்காயம் பெர்சியாவை (இன்றைய ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது.

ஈரான், துருக்கி மற்றும் ஆப்கா

னிஸ்தானிலும் பயிரிடப்படுகிறது.செடியின் அமைப்பு:


பெருங்காயம் பெருலா ஃபொட்டிடா அல்லது பங்கி என்றச் செடியின் பழம்,வேரிலிருந்து மண் ஒரு விதமான சபையிலிருந்து கிடைக்கிறது. வேர் மிகஅகலமாக இருக்கும்.இச்செடியின் காம்பினுள் கெட்டியான அதிக உவர்ப்புச் சுவையான, மணமுள்ள பால் இருக்கும்.அழகான மஞ்சள் நிறமுடைய மலர்களைக் கொண்டது.செடியின் பாலிலிருந்து தான் பெருங்காயம் கிடைக்கிறது.சிறிய மரம்  அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும் வேரையும் கீறி விட்டு, அதில் வடியும் பிசினை எடுத்துப் பக்குவப்படுத்திக் காயவைத்தால், அதுதான் பெருங்காயம்.


 வகைகள்: 


பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என இரு வகைகள் உள்ளன.


காரமும், கசப்பும் கொண்ட பால் பெருங்காயம் தான் சிறந்தது.ஒலியோரெசின் எனும் வேதிப்பொருள் உடலுக்கு நன்மைகள் செய்யக் கூடியது.


பால் பெருங்காயம் சுவை நரம்புகளைத் தூண்டி,சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது.  


இது எளிதாக ஜீரணமாகி மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.


பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள வெறுக்கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும்.


ஆனால்,சமைத்த உணவுகளில் மென்மையானச் சுவையைத் தருகிறது.


 மருத்துவ பயன்கள்: 


இது வெங்காயம், பூண்டு போன்ற வை போல மருத்துவ குணத்தைக் கொண்டது.


உஷ்ணத்தைத் தரக்கூடியது.


உணவைச் செரிக்கிறது.


சுவையை அதிகரிக்க உதவுகிறது.


வயிறு உப்புசம்,கிருமி, குடற்புழு அகற்றியாகவும் பயன்படுகிறது.புரதச்சத்து அதிகம் கொண்டது பெருங்காயம்.அசைவம், சைவம் உணவுகளில் தினசரி சேர்ப்பதன் மூலம் புரதம் கிடைக்க உதவுகிறது.


நரம்புக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகும்.சமையலில் அதிகம் சேர்க்கும் போது அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.


பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து,வலி எடுக்கும் சொத்தைப்பல் குழியில் வைத்துக் கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் போகும்.


ஆஸ்துமா தொந்தரவால் மூச்சு விட கஷ்டப்படுகிறவர்கள் பெருங்காயப் பொடியை அனலில் போட்டு அந்தப் புகையை சுவாசிப்பதால் மூச்சுத்திணறல் தீரும்.


நரம்புத் தளர்ச்சி நீங்க , உலர்ந்த துளசி இலை அல்லது துளசிப் பொடியை, நெய்யில் வறுத்த பெருங்காயத்தூளுடன் சுடுநீரில் கலந்து பருகி வர குணம் கிடைக்கும்.


நரம்புச் சம்பந்தப்பட்ட தலைவலி,ஹிஸ்டீரியா மற்றும் இருமல் குணமாக உதவுகிறது.


இலைகள் வயிற்றுப் புழுக்களை வெளியேற்றவும், வியர்வை மற்றும் சீரணத் தூண்டுவியாகப் பயன்படுகிறது.


இதிலுள்ள வேதிப்பொருள்கள் நுரையீரல்,சுவாச மண்டலம் வழியாக மார்புச் சளியை இருமல் மூலம் வெளியேற்றுகிறது.


மார்பு வலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் இவற்றைப் போக்க உதவுகிறது.


உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இரத்த அடர்த்தியினைக் குறைக்கிறது.


மலமிளக்கி யாகவும்,தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது.


 சளி கரைய: 


பெருங்காயத்தை நீரில் குழைத்து, வயிற்றில் தொப்புளைச் சுற்றி தடவி வர, வயிற்றுப் பொருமல் பாதிப்பு நீங்கும்.

குழந்தைகளின் நெஞ்சில் தடவ, கக்குவான் எனும் சளி பாதிப்பு விலகும்.உணர்ச்சியைத் தூண்டும் தடுப்பானாகவும், ஆக்சிஜனேற்றத் தடுப்பானாகவும் பயன்படுகிறது.

செரிமானம்:

சிறிது பெருங்காயத்தை 1/2 டம்ளர் தண்ணீரில் கரைத்துப் பருகினால், செரிமானத் தொந்தரவுகள் நீங்கும்.

தலைவலி, ஒற்றைத் தலைவலி,வாயுக் கோளாறுகள் போன்ற செரிமானப் பிரச்சினைகள் தீர பெருங்காயம் உதவுகிறது.

தேன் மற்றும் கஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகள்,வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்பு சளி போன்றவை குணமாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.இரத்தச் சர்க்கரையைக் குறைக்க, பாகற்காய் உடன் பெருங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.

எலுமிச்சை சாறுடன் ஒரு சிட்டிகை கலந்து குடித்தால் பல் வலி நீங்கும்.

மிகச் சிறந்த ஆக்சி‌ஜனேற்றத் தடுப்பானாகச் செயல்பட்டு, உடம்பின் அணுக்களை பாதுகாக்கும்.

பல சருமப் பாதுகாப்பு பொருட்களில்்பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் இருப்பதால் , சரும சிகிச்சைக்கு உதவுகிறது.

சருமத்தின் மீது நேரடியாகத் தடவினால் தோல் தடிப்பு மற்றும் தோல் காய்ப்பு நீங்கும்.

தினமும் ஒரு டம்ளர் மோரில் துளிப் பெருங்காயம் சேர்த்து பருகினால் உடல் குளிர்ச்சி ஆகும்.கால்சியம் பெருகும்.லாக்டோ பாசில்லஸ் என்னும் நலம் பயக்கும் நுண்ணியிரியும் கிடைக்கும்.

கூடவே பன்றிக் காய்ச்சலைத் தரும் நுண்ணுயிரியை எதிர்க்கும் ஆற்றலுடையது.

பெண்கள் பாதுகாப்பு:

கர்ப்பிணி பெண்கள் அதிகம் பெருங்காயம் சேர்த்து கொள்ளக் கூடாது.

மாதவிடாய் சரியாக வரவில்லை என்றாலும், அதிக இரத்தப் போக்கு இல்லாமல் இலேசாக வந்து போகும் பிரச்சினைகளை சீர் செய்யும்.

மாதவிடாய் தள்ளித் தள்ளி வருதல், சினைப்பை நீர்க்கட்டி (Polycystic ovary) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக் கொண்டு வருவது நல்லது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,